Monday, 15 August 2016

37.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.புணர்ச்சி என்பது
அ)நிலைமொழியின் முதலும் வருமொழியின் ஈறும் சேருவது
ஆ)நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் சேருவது
இ)நிலைமொழியன் நெடிலும் வருமொழியின் குறிலும் சேருவது
ஈ)நிலைமொழியின் குறிலும் வருமொழியின்நெடிலும் சேருவது
விடை : ஆ)நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் சேருவது

62.தமிழ் + பாடம் = தமிழ்ப்பாடம்
அ)தோன்றல் புணர்ச்சி
ஆ)திரிதல் புணர்ச்சி
இ)கொடுதல் புணர்ச்சி
ஈ)இவற்றில் எதுவுமில்லை
விடை : அ)தோன்றல் புணர்ச்சி

63.இவற்றில் வல்லினம் மிகும் இடம் எது?
அ)எழுவாய்த் தொடரில்
ஆ)வினைத்தொகையில்
இ)இரண்டாம் வேற்றுமை வரியில்
ஈ)இரண்டாம் வேற்றுமைத் தொகையில்
விடை : இ)இரண்டாம் வேற்றுமை வரியில்

64.இவற்றில் வல்லினம் மிகா இடம் எது?
அ)வியங்கோள் வினைமுற்றுக்குப்பின்
ஆ)நான்காம் வேற்றுமை விரியில்
இ)பண்புத்தொகையில்
ஈ)உவமைத்தொகையில்
விடை : அ)வியங்கோள் வினைமுற்றுக்குப்பின்

65.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்
ஆ)ஒரெழுத்து ஒரு மொழியின் பின் வலிலினம் மிகும்
இ)இரட்டைக்கிளவி,அடுக்குத்தொடரில் வல்லினம் மிகும்
ஈ)முற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்
விடை : இ)இரட்டைக்கிளவி,அடுக்குத்தொடரில் வல்லினம் மிகும்

66.இன்ப சொரூபம்
அ)எண்ணும்மை
ஆ)உருவகம்
இ)உவமைத்தொகை
ஈ)உம்மைத்தொகை
விடை : ஆ)உருவகம்

67.அசைகள் தனித்தும் இணைத்தும் கூடி அடிக்கு உறுப்பாக அமைவது
அ)தளை
ஆ)சீர்
இ)அடி
ஈ)தொடை
விடை : ஆ)சீர்

68.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)மனக்குரங்கு-உருவகம்
ஆ)நாடுநகர் - உம்மைத்தொகை
இ)செம்பொன் - வினைத்தொகை
ஈ)மாடும் ஆடும் - எண்ணும்மை
விடை : இ)செம்பொன் - வினைத்தொகை

69.இவற்றில் பொருத்தமற்றது எது?
அ)சொல்வகை - பண்புத்தொகை
ஆ)சேவா - பண்புத்தொகை
இ)இருப்பு - பண்புத்தொகை
ஈ)வெவ்விருப்பு - பண்புத்தொகை
விடை : ஈ)வௌ;விருப்பு - பண்புத்தொகை

70.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)இருப்பு - வலித்தல் விகாரம்
ஆ)கினிவாய் - உவமைத்தொகை
இ)வன்மறவோர் - பண்புத்தொகை
ஈ)கல்திரள் - உவமைத்தொகை
விடை : ஈ)கல்திரள் - உவமைத்தொகை




No comments:

Post a Comment