Wednesday, 17 August 2016

37.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.திராவிட என்னும் சொல்லே தமிழ் என்னும் சொல்லிலிருந்து உருவானதாகம் என கூறியவர்
அ)கால்டுவெல்
ஆ)ஈராஸ் பாதிரியார்
இ)மறைமலையடிகள்
ஈ)பாரதிதாசன்
விடை : ஆ)ஈராஸ் பாதிரியார்

82.எண்பது விழுக்காடு அளவிற்கு திராவிட மொழிக்கூறுகளை கொண்டுள்ள திராவிட மொழி
அ)தமிழ்
ஆ)கன்னடம்
இ)மலையாளம்
ஈ)தெலுங்கு
விடை : அ)தமிழ்

83.திராவிட மொழி இவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ)மன்னைத் திராவிட மொழி
ஆ)மூலத் திராவிட மொழி
இ)தொன்மை திராவிடமொழி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

84.இவற்றில் பொருத்தமற்ற கூற்று எது?
அ)தமிழின் பழமையான நூல் தொல்காப்பியம்
ஆ)ஆரியர் வருகைக்கு முன்னரே தமிழ்மொழி வளர்ந்திருந்தது
இ)திராவிட மொழி என்றாலே தமிழ்மொழியை குறிக்கும்
ஈ)ஆரியரான அகத்தியன் தமிழ் மொழியை தந்தான்
விடை : ஈ)ஆரியரான அகத்தியன் தமிழ் மொழியை தந்தான்

85.இவற்றில் பொருந்தமான கூற்று எது?
அ)பண்பாட்டு மொழியே செவ்வியல் மொழி
ஆ)செம்மொழிக்கான றுகள் பதினொன்று
இ)செவ்வியல் மொழியாக ஒளிர்வது தமிழே
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

86.இவற்றில் சரியான கூற்று எது?
அ)சூhயநாராயண சாஸ்திரியர் எனபதை பரிதிமாற்கலைஞர் என மாற்றிக்கொண்டார்
ஆ)விளாச்சேரி சிற்றூரில் பிறந்தார்
இ)மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழ் பயின்றார்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

87.இயற்றமிழ் மாணவர் என அழைக்கப்பட்டவர்
அ)பரிதிமாற்கலைஞர்
ஆ)பரிதிமாற்கலைஞர்தனது மாணவர்களை அழைத்தார்
இ)தமிழ் மாணவர்கள் அக்காலத்தில் அழைக்கப்பட்டனர்
ஈ)இவற்றில் எதுவுமில்லை
விடை : ஆ)பரிதிமாற்கலைஞர்தனது மாணவர்களை அழைத்தார்

88.இவர்களில் யாரின் தலைமையில் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது?
அ)பாசுகரசேதுபதி
ஆ)பரிதிமாற்கலைஞர்
இ)உ.வே.சாமிநாதய்யர்
ஈ)இராகவனார்
விடை : அ)பாசுகரசேதுபதி

89.பரிதிமாற்கலைஞரின் தமிழ் புலமையும் கவிபாடும் திறனையும் கண்டு.... என்னும் சிறப்புப் பட்டத்தை யாழ்ப்பாணம் சி.வை .தாமோதரனார் வழங்கினார்.
அ)தமிழ் சாஸ்திரி
ஆ)திராவிட சாஸ்திரி
இ)பரிதிமாற் காலைஞர்
ஈ)தமிழ்கலைஞர்
விடை : ஆ)திராவிட சாஸ்திரி

90.பரிதிமாற்கலைஞர் எந்த நூலில் தனது பெயரை மாற்றிக் கொண்டார்?
அ)தனிப்பாசுரத்தொகை
ஆ)நுண்பொருள்மாலை
இ)இரத்தின் கவிராயர்
ஈ)தமிழிழன்பம்
விடை : அ)தனிப்பாசுரத்தொகை




No comments:

Post a Comment