Tuesday, 9 August 2016

37.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.நீளம் - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)தொழிற்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஈ)பண்புப்பெயர்

62.கெடுப்பதூஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)சொல்லிசையளபெடை
ஆ)இன்னிசையளபெடை
இ)இசைநிறையளபெடை
ஈ)செய்யுளிசையளபெடை
விடை : ஆ)இன்னிசையளபெடை
63.சொலல் - என்பதன்இலக்கணக் குறிப்பு தேர்க
அ)பண்புப்பெயர்
ஆ)இடப்யெர்
இ)தொழில்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)தொழில்பெயர்

64.நகையும் உவகையும் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)வினைமுற்று
ஆ)எண்ணுமை
இ)முதற்போலி
ஈ)பண்புப்பெயர்
விடை : ஆ)எண்ணுமை

65.இரீஇ - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)இன்னிசை அளபெடை
ஆ)சொல்லிசை அளபெடை
இ)வினைச்சொல்
ஈ)வினைமுற்று
விடை : ஆ)சொல்லிசை அளபெடை

66.உறுபடை - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)வேற்றுமைத் தொடர்
ஆ)பெயரெச்சத் தொடர்
இ)வினையெச்சத் தொடர்
ஈ)உரிச்சொற்றொடர்
விடை : ஈ)உரிச்சொற்றொ

67.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'அழகன் குழல் ஊதினான்
அ)அழகன் எதை ஊதினான்?
ஆ)அழகன் ஊதிய பொருள் எது?
இ)குழலின் பயன்பாடு யாது?
ஈ)அழகன் இசைத்தது எது?
விடை : அ)அழகன் எதை ஊதினான்?

68.விடைக்கெற்ற வினாவைத் தேர்ந்தெடு
சேரமான் இரும்பொறையின் அவைப்புலவர் பெய்கையார்"
அ)சேரமான் இரும்பொறையின் நண்பர் யார்?
ஆ)சேரமான் இருபொறiயின் அவைப்புலவர் யார்?
இ)இரும்பொறை எந்த நாட்டை ஆண்ட மன்னன்?
ஈ)பொய்கையார் யார்?
விடை : ஆ)சேரமான் இருபொறiயின் அவைப்புலவர் யார்?

69.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
"உள்ளம் என்பது மனம்"
அ)உள்ளம் என்பது எது?
ஆ)மனமே உள்ளம் என்பது சரியா?
இ)உள்ளத்தின் சிறப்பு யாது?
ஈ)உள்ளம் மனம் இரண்டும் ஒன்றா?
விடை : அ)உள்ளம் என்பது எது?

70.விடைக்கேற்ற வினாவைத் தோந்தெடு
'ஐம்பொருங்காப்பியங்களுள் ஒன்று குண்லகேசி"
அ)ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
ஆ)குண்டலகேசி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றா
இ)ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று எது?
ஈ)குண்லகேசி பொங்காப்பியமா?
விடை : இ)ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று எது?




No comments:

Post a Comment