Monday, 1 August 2016

38.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.பெயர்ச்சொல்லின் வகையறிக 'செந்தாமரை"
அ)இடப்பெயர்
ஆ)தொழல்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)குணப்பெயர்
92.பெயர்ச்சொல்லின் வகையறிக: 'சூழ்ச்சி"
அ)தொழில் பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : அ)தொழில் பெயர்
93.பெயர்ச்சொல்லின் வகையறிதல் 'நடத்தல்"
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்
94.பெயர்ச்சொல்லின் வகையறிக 'சென்னை"
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : இ)இடப்பெயர்
95.இளங்கதிர் - இலக்கணக் குறிப்பறிக
அ)பண்புத்தொகை
ஆ)உம்மைத் தொகை
இ)உரிச்சொல் தொடர்
ஈ)வினைத் தொகை
விடை : அ)பண்புத்தொகை
96.'அவியுணவு"- இச்சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ)பண்புத் தொகை
ஆ)பண்புப் பெயர்
இ)இருபெயரொட்டுப் பண்புத்தொகை
ஈ)பண்பு ஆகுபெயர்
விடை : இ)இருபெயரொட்டுப் பண்புத்தொகை
97.இலக்கணக் குறிப்பு தேர்க :'மதிமுகம்"
அ)உருவகம்
ஆ)ஒருபொருட்பன்மொழி
இ)உவமைத் தொகை
ஈ)உம்மைத் தொகை
விடை : இ)உவமைத் தொகை
98.இலக்கணக் குறிப்பறிக 'நசைஇ"
அ)இசைநிறையளபெடை
ஆ)சொல்லிசையளபெடை
இ)முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
ஈ)வேற்றுமைத் தொகை
விடை : ஆ)சொல்லிசையளபெடை
99.இலக்கணக் குறிப்பறிந்து எழுதுக 'பனிப் போர்வை"
அ)பண்புத் தொகை
ஆ)உவமைத் தொகை
இ)உருவகம்
ஈ)உவமேயம்
விடை : இ)உருவகம்
100.'வாழ்" என்பதன் வியங்கோள் வினைமுற்று
அ)வாழ்வு
ஆ)வாழ்க
இ)வாழ்தல்
ஈ)வாழ்ந்தான்
விடை : ஆ)வாழ்க



No comments:

Post a Comment