Wednesday, 17 August 2016

38.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.மறைமலையடிகள் இயற்பெயர்
அ)மகாலிங்கம்
ஆ)சுவாமி வேதாசலம்
இ)மீனாட்சி சுந்தரம்
ஈ)இராசமாணிக்கம்
விடை : ஆ)சுவாமி வேதாசலம்

92.மறைமலையடிகள் இதில் எந்த நூலை எழுதினார்?
அ)முல்லைப்பாட்டு ஆராய்ச்சி
ஆ)திருக்குறள் ஆராய்ச்சி
இ)திருவாசக விரிவுரை
ஈ)இவையனைத்தும்
விடை : ஈ)இவையனைத்தும்

93.மறைமலையடிகள் படைப்பில் பொருத்தமான இணை எது?
அ)அறிவுக்கடல் - இதழ்
ஆ)நாகநாட்டரசி - புதினம்
இ)தமிழர் மதம் - நூல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

94.மறைமலையடிகள் இதனை தோற்றுவித்தார்
அ)ஐந்தாம் தமிழ்ச்சங்கம்
ஆ)செம்மொழி இயக்கம்
இ)தனித்தமிழ் இயக்கம்
ஈ)தமிழ் பாதுகாப்பு இயக்கம்
விடை : இ)தனித்தமிழ் இயக்கம்

95.இவற்றில் பரிதிமாற்கலைஞர் பற்றிய தவறான கூற்று எது?
அ)ரூபாவதி கலாவதி நாடகங்களை இயற்றினார்
ஆ)அவரின் நாடகங்களில் சுதாநாயகனாக நடித்தார்
இ)சித்திரக்கவி நூலை எழுதினார்
ஈ)குமரகுருபரரின் நீதிநெறி விளக்கத்திற்கு உரையெழுதினார்
விடை : ஆ)அவரின் நாடகங்களில் சுதாநாயகனாக நடித்தார்

96.இவற்றில் எந்த இதழை பரிதிமாற்கலைஞர் நடத்தினார்?
அ)சித்திரக்கவி
ஆ)ஞானபோதினி
இ)ஞானரதம்
ஈ)ஞானவிகல்பம்
விடை : ஆ)ஞானபோதினி

97.இவற்றில் ந.மு வேங்கடசாமி எழுதிய நூல் உரை எது
அ)சிலப்பதிகாரம் மணிமேகலை
ஆ)அகநானூறு
இ)திருவிளையாடற்புராணம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

98.இவற்றில் எதனை ந.மு.வேங்கடசாமி நாட்டார் இயற்றவில்லை?
அ)நக்கீரர்,அகத்தியர் ஆய்வு நூல்கள்
ஆ)முத்தொள்ளாயிரம் விளக்கம்
இ)கள்ளர் சரித்திரம்
ஈ)கபிலர் ஆய்வு நூல்
விடை : ஆ)முத்தொள்ளாயிரம் விளக்கம்

99.இரா.பி சேதுப்பிள்ளை இவ்வாறு அழைக்கப்படுகிறார்
அ)மொழி ஞாயிறு
ஆ)சொல்லின் செல்வர்
இ)தமிழ்த்தென்றல்
ஈ)செந்தமிழ் செல்வர்
விடை : ஆ)சொல்லின் செல்வர்

100.இவற்றுள் இரா.பி.சேதுப்பிள்ளை இயற்றிய நூல் எது?
அ)ஊரும் பேரும் செந்தமிழும் கொடுந்தமிழும்
ஆ)தமிழ் விருந்து வேலும் வில்லும்
இ)தமிழ்நாட்டு நவமணிகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்




No comments:

Post a Comment