Wednesday, 3 August 2016

38.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11."தருக" வேர்ச்சொல்லை அறிக
அ)தரு
ஆ)தா
இ)தருவான்
ஈ)தந்த
விடை : ஆ)தா

12.பொறு என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்
அ)பொறுத்தான்
ஆ)பொறுத்தல்
இ)பொறுக்கினான்
ஈ)வெறுத்தான்
விடை : ஆ)பொறுத்தல்

13.'உண்" என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம்
அ)உண்டு
ஆ)உண்டான்
இ)உண்டவர்
ஈ)உண்ணுதல்
விடை : அ)உண்டு

14.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக 'வாழ்"
அ)வாழ்ந்தான்
ஆ)வாழ்கின்ற
இ)வாழ்ந்த
ஈ)வாழ்ந்து
விடை : ஈ)வாழ்ந்து

15.செல் என்ற சொல்லின் வினையெச்சம் அறிக
அ)சென்ற
ஆ)சென்று
இ)சென்றான்
ஈ)செல்க
விடை : ஆ)சென்று

16.நட என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்றை அறிக
அ)நடந்தான்;
ஆ)நடந்து
இ)நடந்த
ஈ)நடந்தவன்
விடை : அ)நடந்தான்;

17.செய் என்னும் வேர்ச்சொல்லை பெயரெச்சமாக்குக
அ)செய்தான்
ஆ)செய்த
இ)செய்த
ஈ)செய்யும்
விடை : ஆ)செய்த

18.ஒட்டக்கூத்தர் எழுதிய காண்டம் தேர்க
அ)பாலகாண்டம்
ஆ)உத்தர காண்டம்
இ)சுந்தர காண்டம்
ஈ)கிட்கிந்தா காண்டம்
விடை : ஆ)உத்தர காண்டம்

19.இவர் சங்க காலப் பெண்பாற் புலவர்
அ)காரைக்காலம்மையார்
ஆ)திலகவதியார்
இ)நன்முல்லையார்
ஈ)மங்கையர்க்கரசியார்
விடை : இ)நன்முல்லையார்

20.சோழ நாட்டின் தலைநகரமாயிருந்த ஊர்
அ)வஞ்சி
ஆ)மதுரை
இ)புகார்
ஈ)காஞ்சி
விடை : இ)புகார்



No comments:

Post a Comment