Sunday, 7 August 2016

38.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.'தா" என்னும் ஒரெழுத்து ஒருமொழியின் பொருளைக் கண்டறிக
அ)கொடு
ஆ)கொடை
இ)வழங்குதல்
ஈ)பெறுதல்
விடை : அ)கொடு

72. 'மீ" என்னும் ஒரெழுத்து ஒருமொழிக்கு பொருள் யாது?
அ)உச்சி
ஆ)சிகரம்
இ)மேல்
ஈ)உயரம்
விடை : இ)மேல்

73. 'பா" என்னும் ஒரெழுத்து ஒருமொழிக்கு பொருள் யாது?
அ)பாட்டு
ஆ)இசை
இ)மெட்டு
ஈ)பாவை
விடை : அ)பாட்டு

74.'தை" என்ற ஒரெழுத்தின் உரிய பொருள் கூறுக
அ)மாதம்
ஆ)தாவதல்
இ)கொடுத்தல்
ஈ)குதித்தல்
விடை : அ)மாதம்

75.ஒரெழுத்து ஒருமொழிக்குரிய சொல் கண்டறிக 'நா"
அ)நாள்
ஆ)நாடு
இ)நார்
ஈ)நாக்கு
விடை : ஈ)நாக்கு

76.'சென்றான்" - இச்சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிக
அ)சென்
ஆ)சென்று
இ)செல்
ஈ)சென்ற
விடை : இ)செல்

77.'பார்த்தான்"- இச்சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிக
அ)பார்த்த
ஆ)பார்த்து
இ)பார்
ஈ)பார்த்தது
விடை : இ)பார்

78.வேர்ச்சொல்லை தேர்வு செய்க 'வனைந்தான்"
அ)வனைந்து
ஆ)வனை
இ)வனைதல்
ஈ)வன்
விடை : ஆ)வனை

79.வேர்ச்சொல்லை கண்டறிக 'பேணார்"
அ)பேண்
ஆ)பேணா
இ)பேணார்
ஈ)பேணு
விடை : அ)பேண்

80.வேர்ச்சொல்லை கண்டறிக 'அளித்தல்"
அ)அளித்து
ஆ)அளித்
இ)அளி
ஈ)அள
விடை : இ)அளி



No comments:

Post a Comment