Wednesday, 17 August 2016

3.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.நாட்டுப்புறப் பாடலில் பொருத்தமான இணை எது?
அ)இடியும் மின்னலும் - வானவேடிக்கை
ஆ)வெண்மணல் - பஞ்சுமெத்தை
இ)முழு நிலவு - விளக்கு
ஈ)வணங்கும் தலைவன் - கடல்
விடை : ஆ)வெண்மணல் - பஞ்சுமெத்தை

22.தமிழ் நாட்டுப்புறப் பாடல்களை முதன் முதலில் காற்றில் மிதந்த கவிதை என்னும் பெயரில வெளியிட்டவர்
அ)மு.அருணாசலம்
ஆ)மு.ராமசாமி
இ)அ.மு பரமசிவானந்தம்
ஈ)திருலொக சீதாராம்
விடை : அ)மு.அருணாசலம்

23.இவற்றில் நாட்டுபுற இயலின் முக்கிய பண்பு
அ)வாய்வழியாக பரவுதல்
ஆ)ஆசிரியர் இல்லாமை
இ)மரபு வழிப்பட்டது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

24.நாட்டுப்புறவியலைதமிழகத்தில தனியொரு துறையாக வளர்த்தவர் யார்?
அ)ஆறு அழகப்பன்
ஆ)இ.வா.ஜகந்நாதன்
இ)வானமாமலை
ஈ)மு.ராமசாமி
 விடை : இ)வானமாமலை

25.நாட்டுப்புறவியலின் தந்தை என போற்றப் படுபவர்
அ)சு.சக்திவேல்
ஆ)தே.லர்து
இ)கி.வா .ஐனந்நாதன்
ஈ)வானமாமலை
 விடை : ஈ)வானமாமலை

26.முக்கிய சித்தர்கள் எத்தனை பேர்?
அ)12
ஆ)14
இ)15
ஈ)18
விடை : ஈ)18

27.சித்தர்கள் பற்றிய சரியான கூகூற்று எது?
அ)சித்துக்களை செய்ய வல்லவர்கள்
ஆ)சித்துக்கள் எட்டு வகைப்படும்
இ)அட்டமா சித்திகள் என அழைப்பர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

28.இவற்றில் தாயுமானவர் பற்றிய தவறான கூகூற்று எது?
அ)திருமறைக்காட்டில் பிறந்தார்
ஆ)ஆங்கிலேயரிடம் கருவூல அலுவலராக பணியாற்றினார்
இ)நூல் தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
ஈ)கி.பி.பதினெட்டாம் நூற்றாண்டு
விடை : ஆ)ஆங்கிலேயரிடம் கருவூல அலுவலராக பணியாற்றினார்

29.தாயுமானவர் என்ற இறைவன் எங்குள்ள மலைமீது எழுந்தருளியுள்ளார்?
அ)நாமக்கல்
ஆ)நாகப்பட்டினம்
இ)திருச்சிராப்பள்ளி
ஈ)மதுரை
 விடை : இ)திருச்சிராப்பள்ளி

30.திருமந்திரத்தல் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே என்ற அடிகளில் உபாயம் என்பதன் பொருள் யாது?
அ)உறுதி
ஆ)மெய்யறிவு
இ)வழிவகை
ஈ)உடல்
விடை : இ)வழிவகை



No comments:

Post a Comment