Monday, 15 August 2016

40.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.இவற்றில் பொருத்தமற்ற இணை எது
அ)கல்திரள்தோள் - உவமைத்தொகை
ஆ)இருந்த வள்ளல் - வினையெச்சம்
இ)கழல் - தானியாகுபெயர்
ஈ)வந்தனென் - தன்மை ஒருமை வினை
விடை : ஆ)இருந்த வள்ளல் - வினையெச்சம்

92.சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையை தேர்வு செய்க குறுகி,சேவிக்க
அ)வினையெச்சம் வினையெச்சம்
ஆ)வியங்கோள் வினைமுற்று பண்புத் தொகை
இ)பண்புத்தொகை வியங்கோள் வினை முற்று
ஈ)உரிச்சொற்றொடர் உரிச்சொற்றொடர்
விடை : அ)வினையெச்சம் வினையெச்சம்

93.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)அழைத்தி - முன்னிலை ஒருமை வினை முற்று
ஆ)வருக - வியங்கோள் வினைமுற்று
இ)புதைந்து - தொழிற்பெயர்
ஈ)பணிந்து - வினiயெச்சம்
விடை : இ)புதைந்து - தொழிற்பெயர்

94.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)தேனும் மீனும் - எண்ணும்மை
ஆ)மாதவர் - முன்னிலை ஒருமை வினை முற்று
இ)வளைந்து - வினையெச்சம்
ஈ)அமைந்த காதல் - பெயரெச்சம்
விடை : ஆ)மாதவர் - முன்னிலை ஒருமை வினை முற்று

95.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)தழீஇய - செய்யுளிசை அளபெடை
ஆ)சீர்த்த - ஒற்றன்பால் வினைமுற்று
இ)பார்த்தகண்ணை - பெயரெச்சம்
ஈ)கார்குலாம் -ஆறாம் வேற்றுமைத்தொகை
விடை : அ)தழீஇய - செய்யுளிசை அளபெடை

96.இவற்றில் பொருத்தமற்ற இலக்கணக் குறிப்பு எது?
அ)தீர்கிலோன் - தன்மை ஒருமை வினை முற்று
ஆ)தீராக்காதலன் - ஈறுகெட்ட எதிர்மறை யொரெச்சம்
இ)மலர்ந்த கண்ணன் - பெயரெச்சம்
ஈ)இனிய நண்ப - பண்புத்தொகை
விடை : ஈ)இனிய நண்ப - பண்புத்தொகை

97.சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க
நெடுவாய் தாமரை நயனம்
அ)உவமைத்தொகை ,பண்புத்தொகை
ஆ)பண்புத்தொகை,உவமைத்தொகை
இ)உரிச்சொற்றொடர்,வினைத்தொகை
ஈ)வினைத்தொகை,உரிச்சொற்றொடர்
விடை : ஆ)பண்புத்தொகை,உவமைத்தொகை

98.இவற்றில் பொருந்தாத இணை எது?
அ)நனிகடிது - உரிச்சொற்றோடர்
ஆ)நெடுநீர் - பண்புத்தொகை
இ)நண்னுதல் - நான்காம் வேற்றுமைத்தொகை
ஈ)என்னுயிர் - ஆறாம் வேற்றுமைத்தொகை
விடை : இ)நண்னுதல் - நான்காம் வேற்றுமைத்தொகை

99.இவற்றில் அடுக்குத்தொடருடன் பொருத்தமற்றது எது?
அ)சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும்
ஆ)பிரித்தால் பொருள் தரும்
இ)இரண்டு,மூன்று,நான்கு முறை அடுத்கி வரும்
ஈ)விரைவு,அச்சம் ,வெகுளி,மகிழ்ச்சி
விடை : அ)சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும்

100.இவற்றில் இரட்டைக்கிளவியுடன் பொருத்த மற்றது எது?
அ)பிரித்தால் பொருள் தராது
ஆ)இரட்டித்தே வரும்
இ)சொற்கள் தனித்தனியே நிற்கும்
ஈ)இசை,குறிப்பு,பண்பு பற்றி வரும்
விடை : இ)சொற்கள் தனித்தனியே நிற்கும்




No comments:

Post a Comment