Sunday, 7 August 2016

40.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.எவ்வகை வாக்கியம் எனத் தேர்வு செய்க மாணவர்கள் அனைவரும் சீருடையில் வர வேண்டும்
அ)செய்தி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : ஈ)கட்டளை வாக்கியம்

92.எவ்வகை வாக்கியம் எனத்தேர்வு செய்க
'யார் கல்விச் செல்வம் பெறுகிறார்களோ அவர்கள் வாழ்வில் வளம் பெறுவர்"
அ)வினா வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : இ)கலவை வாக்கியம்

93.எவ்வகை வாக்கியம் எனத்தேர்வு செய்க
'அனைவரும் நல்லமுறையில் தேர்வு எழுதினர்"
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஈ)செய்தி வாக்கியம்

94. எவ்வகை வாக்கியம் எனத்தேர்வு செய்க 'ஆ"வானத்து விண்மீன்கள் என்னே அழகு!
அ)கட்டளை வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம்

95.எவ்வகை வாக்கியம் எனத் தேர்வு செய்க
ஏன் உனக்கு உடம்பு சரியில்லையா?
அ)வினா வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : அ)வினா வாக்கியம்

96.பிறவினைத் தொடர் அறிக
அ)செல்வனால் குமரன் திருந்தினான்
ஆ)செல்வன் குமரனைத் திருத்தினான்
இ)செல்வானால் குமரனைத் திருத்தியது
ஈ)செல்வம் குமரன் திருத்தினான்
விடை : ஆ)செல்வன் குமரனைத் திருத்தினான்

97.தன்வினைத் தொடரை எழுதுக
அ)பாலன் நடனம் கற்றான்
ஆ)பாலனால் நடனம் கற்பிக்கப்பட்ட
இ)பாலனே நடனம் கற்பித்தான்
ஈ)நடனம் பாலனுக்குக் கற்பிக்கப்பட்டது
விடை : அ)பாலன் நடனம் கற்றான்

98.தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)பூங்கோதை பொம்மை செய்வித்தாள்
ஆ)மழைநீர் மக்களால் சேமிக்கப்பட்டது
இ)நற்செயல்களை அனைவரும் போற்றுவர்
ஈ)பூங்கோதை பொம்மை செய்தாள்
விடை : ஈ)பூங்கோதை பொம்மை செய்தாள்

99.செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)வீடு கட்டப்பட்டது
ஆ)அன்னை அன்பு காட்டுவார்
இ)மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர்
ஈ)காகம் தொடர் கரைந்தது
விடை : இ)மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர்

100.செயப்பாட்டு வினைத்தொடரை அறிக
அ)தச்சனால் கட்டில் செய்யப்பட்டது
ஆ)தச்சன் கட்டில் செய்தான்
இ)தச்சானல் செய்தது கட்டில்
ஈ)தச்சர் செய்தார் கட்டில்
விடை : அ)தச்சனால் கட்டில் செய்யப்பட்டது




No comments:

Post a Comment