Monday, 15 August 2016

41.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க
ஊரா,சென்ற வட்டி
அ)பண்புத்தொகை வினைத்தொகை
ஆ)விளித்தொடர்,பெயரெச்சம்
இ)பெயரெச்சம்,விளித்தொடர்
ஈ)வினைத்தொகை,பண்புத்தொகை
விடை : ஆ)விளித்தொடர்,பெயரெச்சம்

2.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)பொன்னும் துகிரும் - எண்ணும்மை
ஆ)மாமலை - உரிச்சொற்றொடர்
இ)அருவிலை - வினைத்தொகை
ஈ)நன்கலம் - பண்புத்தொகை
விடை : இ)அருவிலை - வினைத்தொகை

3.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)செலவொழியா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆ)வழிக்கரை - உரிச்சொற்றொடர்
இ)உறுவேனில் - ஆறாம் வேற்றுமைத் தொகை
ஈ)பந்தர் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
விடை : அ)செலவொழியா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

4.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)அனைந்த வாக்கீசர் - பெயரெச்சம்
ஆ)பொங்குகடல் - வினைத்தொகை
இ)பெருமையறிந்து - உரிச்சொற்றொடர்
ஈ)அறிந்து - வினையெச்சம்
விடை : ஈ)அறிந்து - வினையெச்சம்

5.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)கரகமலம் - உருவகம்
ஆ)பொழிந்திழிய - பெயரெச்சம்
இ)தேசம் - இடவாகுபெயர்
ஈ)வந்தவர் - வினையாலணையும் பெயர்
விடை : ஆ)பொழிந்திழிய - பெயரெச்சம்

6.சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிவை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க. நற்கறிகன்,இன்னமுதல்
அ)வினையெச்சம்,பெயரெச்சம்
ஆ)பண்புத்தொகை,பண்புத்தொகை
இ)வினையெச்சம்,வினையெச்சம்
ஈ)பெயரெச்சம்,பெயரெச்சம்
விடை : ஆ)பண்புத்தொகை,பண்புத்தொகை

7.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)தாய்தந்தை - உம்மைத்தொகை
ஆ)மல்லல் குருத்து - உரிச்சொற்றொடர்
இ)தீண்டியற்று - ஒன்றன்பால் வினைமுற்று
ஈ)துளங்குதல் - உரிச்சொல் தொடர்
விடை : ஈ)துளங்குதல் - உரிச்சொல் தொடர்

8.இவற்றில் தவறான இலக்கணக் குறிப்பு
அ)பூதி சாத்த -இரண்டாம் வேற்றுமைத் தொகை
ஆ)அங்கணர் - அன்மொழித்தொகை
இ)நோக்கி - வினையெச்சம்
ஈ)பணிவிடம் - தொழிற்பெயர்
விடை : ஈ)பணிவிடம் - தொழிற்பெயர்

9.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)தேர்ந்து கொளல் - வினையெச்சம்
ஆ)கொளல் - அல் ஈற்று வியங்கோள் விணைமுற்று
இ)உற்ற நோய் - வினைத்தொகை
ஈ)பெற்றியார் -  வினையாலைணையும் பெயர்
விடை : இ)உற்ற நோய் - வினைத்தொகை

10.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)உறா அமை - இன்னிசை அளபெடை
ஆ)கொளல் - தொழிற்பெயர்
இ)வன்மை - வினையெச்சம்
ஈ)ஒழுகுதல் - பெயரெச்சம்
விடை : ஆ)கொளல் - தொழிற்பெயர்




No comments:

Post a Comment