Wednesday, 3 August 2016

41.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க:'தமிழ்ர்க்கு காதலும் வீரமும் இரு கண்களாகும்"
அ)தமிழர்க்குக் காதலும் வீரமும் இரு கண்களா?
ஆ)தமிழ்ர்க்குரிய சிறப்புக்கள் யாவை?
இ)தமிழர்க்கு எவை இரு கண்களாகும்?
ஈ)தமிழரின் பண்புகள் யாவை?
விடை : இ)தமிழர்க்கு எவை இரு கண்களாகும்?

42.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
'திருக்குறள் உலகம் பொதுமறையாகும்"
அ)திருக்குறள் எவ்வகை நூல்
ஆ)உலகப் பொதுமறையா?
இ)திருக்குறள் பொதுமறையா?
ஈ)திருக்குறளின் பொருள் யாது?
விடை : இ)திருக்குறள் பொதுமறையா?

43.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'குழந்தையைத் தாலாட்டிப் பாடுவது வாய்மொழி இலக்கியம் ஆகும்
அ)குழந்தையைத் தாலட்டுவது எவ்வாறு?
ஆ)தாலாட்டு என்றால் என்ன?
இ)தாலாட்டுவது வாய்மொழி இலக்கியமா?
ஈ)குழந்தையைத் தாலட்டிப் பாடுவது எவ்வகை இலக்கியம்?
விடை : ஈ)குழந்தையைத் தாலட்டிப் பாடுவது எவ்வகை இலக்கியம்?

44. பெண் கல்விக்காக அரசு வழங்கும் ஊக்கச் சலுகைகளை உடனுக்குடன் கிடைக்கச் செய்ய வேண்டும்- இது எவ்வகை வாக்கியம்?
அ)வியங்கோள் வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)வியப்பு வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)செய்தி வாக்கியம்

45.வாழ்க தமிழினம்! வளர்க தமிழ் மருத்துவம்" இது எவ்வகை வாக்கியம் ?
அ)விழைவு வாக்கியம்
ஆ)வியங்கோள்ட வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : ஆ)வியங்கோள்ட வாக்கியம்

46.புலவர் அழகப்பன் சிறந்த ஆசிரியர் அதனால்
அவரைத் தமிழக அரசு பரிசு வழங்கி பாராட்டியது"
அ)கலவை வாக்கியம்
ஆ)தொடர் வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : ஆ)தொடர் வாக்கியம்

47.'என்னே! மாமல்லபுரத்தின் அழகு! -இது எவ்வகை வாக்கியம்?
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)தனி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : அ)உணர்ச்சி வாக்கியம்

48.எவ்வகை வாக்கியம் எனக் கூறுக 'காவிரி குடகிழல் தோன்றித் தமிழ்நாட்டில் புகுந்தது கடலில் கலக்கிறது"
அ)கலவை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்
விடை : ஆ)செய்தி வாக்கியம்

49.எவ்வகை வாக்கியம் எனக் கூறுக
'மாடுகள் செல்கின்றன"
அ)செய்வினை வாக்கியம்
ஆ)உடன்பாட்டு வாக்கியம்
இ)பிறவினை வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : ஆ)உடன்பாட்டு வாக்கியம்

50.எவ்வகை வினைவகை எனக் கண்டறிக 'கம்பர் இராமாயணத்தை இயற்றினார்"
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)குறிப்பு வினை
ஈ)பிறவினை
விடை : அ)செய்வினை




No comments:

Post a Comment