Tuesday, 16 August 2016

42.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றினை எடுத்தியம்பும் நூல்
அ)தீன்குறள்
ஆ)திருமணிமாலை
இ)சீறாப்புராணம்
ஈ)திருவருள் மாலை
விடை : இ)சீறாப்புராணம்

22.சீறாப்புராணத்தில் சீறா என்பது
அ)வாழ்க்கை
ஆ)வரவாறு
இ)காண்டம்
ஈ)பாடல்
விடை : அ)வாழ்க்கை

23.இவற்றில் சீறாப்புராணத்தின் காண்டம் எது?
அ)விலாதத்துக் காண்டம்
ஆ)நுபுவ்வத்துக் காண்டம்
இ)ஹிஜ்ரத்துக் காண்டம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

24.சீறாப்புராணத்தை இயற்றியவர்
அ)ஆறுமுக நாவலார்
ஆ)உமறுப்புலவர்
இ)சேகணாப் புலவர்
ஈ)சவ்வாதுப்புலவர்
விடை : ஆ)உமறுப்புலவர்

25.உமறுப்புலவர் பற்றிய தவறான கூற்று எது?
அ)எட்டயபுரம் கடிகை முத்துப்புலவரின் மாணவர்
ஆ)வள்ளல் சீதக்காதி வேண்டுகோளின்படி எழுதினார்
இ)அப்துல்காதிர் வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது
ஈ)முதுமொழிமாலை என்ற நூலையும் எழுதியள்ளார்
விடை : இ)அப்துல்காதிர் வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது
  
26.நீ இன்றுமுதல் உயிர்வதை செய்வதனை விடுத்து என் யார் கூறுவதாக சீறாப் புராணம் கூறுகிறது
அ)வேந்தன்
ஆ)படைத்தளபதி
இ)இறைதூதர்
ஈ)படைவீரன்
விடை : இ)இறைதூதர்

27.குலசேகர ஆழ்வார் பற்றிய சரியான கூற்று எது?
அ)திருவஞ்சைக்களத்தில பிறந்தவர்
ஆ)குலசேகரப் பெருமாள் என அழைக்கப் பட்டார்
இ)பெருமாள் திருமொழி,முகுந்தமாலை நூல்களை இயற்றினார்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
  
28.நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பற்றிய தவறான கூற்று எது?
அ)திருமால் முழு முதற்கடவுள்
ஆ)பன்னிரு ஆழ்வார்கள் பாடியது
இ)சைவ சமயத்தின் முதன்மை நூல்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை : இ)சைவ சமயத்தின் முதன்மை நூல்

29.சேக்கிழார் எந்த மன்னன் மனதை மாற்ற பெரியபுராணம் இயற்றியதாக கூறப்படுகிறது?
அ)முதலாம் மகேந்திரவர்மன்
ஆ)அருண்மொழித்தேவன்
இ)அநபாய சோழன்
ஈ)குலோத்துங்க சோழன்
விடை :  இ)அநபாய சோழன்

30.இவர் பாடிய சைவ அடியார்களைப் பற்றிப் பாடிய விரிவான வரலாறு நூலே பெரியபுராணம்
அ)சுந்தரர்
ஆ)நம்பியாண்டார் நம்பி
இ)தீருநாவுக்கரசர்
ஈ)அ மற்றும் ஆ
 விடை : ஈ)அ மற்றும் ஆ




No comments:

Post a Comment