Wednesday, 17 August 2016

42.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.இவற்றில் தேவநேய பாவாணர் பற்றிய தவறான கூற்று எது?
அ)பிறந்தஊர் சங்கரன்கோவில்
ஆ)174 சிறப்புப்பெயர்களைப் பெற்றவர்
இ)நான்காம் தமிழ்ச்சங்கம் அமைப்பதில் முன்னோடி
ஈ)பண்டிதர்,புலவர்,வித்துவான்
விடை : இ)நான்காம் தமிழ்ச்சங்கம் அமைப்பதில் முன்னோடி

32.தன் வாழ்நாள் முழுவதும் இதற்காக ஆய்வு செய்து நிறுவிய செம்மல் தேவநேயப் பாவாணர்
அ)உலக முதன்மொழி தமிழ்
ஆ)இந்திய மொழிகளுக்கு மூலமும் வேரும் தமிழ்
இ)திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

33.இவற்றில் தேவநேயப்பாவாணரின் சரியான கூற்று எது?
அ)உலகின் முதல் மாந்தன் தமிழன்
ஆ)தமிழன் தோன்றிய இடம் குமரிக் கண்டம்
இ)மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகம் பழந்தமிழர் நாகரிகம்
ஈ)இவை அமைத்தும்
விடை : ஈ)இவை அமைத்தும்

34.இவற்றில் தேவநேயப்பாவாணர் வலியுறுத்தாதது எது?
அ)வடமொழி வல்லாண்மையிலிருந்து மீட்கப்பட வேண்டும்
ஆ)ஆங்கிலத்தின் மோகத்தை அழிக்க வேண்டும்
இ)கோவில்களில் தமிழில் வழிபாடு நடைபெறவேண்டும்
ஈ)பிறப்பு இறப்புத் தொடர்பான சடங்குகள் யாவும் தமிழில் நடைபெற வேண்டும்
விடை : ஆ)ஆங்கிலத்தின் மோகத்தை அழிக்க வேண்டும்

35.இவற்றில் தேவநேயப் பாவாணர் இயற்றாத நூல் எது?
அ)தமிழ் வரலாறு முதல் தாய்மொழி
ஆ)தமிழ்நாட்டு விளையாட்டுகள்
இ)தமிழர்திருமணம் ,தமிழர் மதம்
ஈ)கம்பர்யார்,அற்புத ரசம்
விடை : ஈ)கம்பர்யார்,அற்புத ரசம்

36.இவற்றில் மொழிஞாயிறு தேவநேயப் பாவணர் இயற்றிய நூல் எது?
அ)வடமொழி வரலாறு மண்ணிலே விண்
ஆ)பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்
இ)சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்,திருக்குறள் மரபுரை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

37.இதில் தேவநேப் பாவாணர் பற்றிய தவறான கூற்று எது?
அ)சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராக பணிபுரிந்தார்
ஆ)தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில துணைவேந்தராக பணிபுரிந்தார்
இ)சொற்பிறப்பியல் அகரமுதலியை வெளியிட்டார்
ஈ)இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வெளிட்டார்
விடை : ஆ)தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில துணைவேந்தராக பணிபுரிந்தார்

38.இவற்றில் தேவநேயப் பாவாணர் பற்றிய சரியான கூற்று எது?
அ)வறுமையில் வாடினாலும் கையில் பணம் கிடைத்தால் நூல்களே வாங்கினார்
ஆ)புலமைச் செருக்கில்லாமல் மிகவும் எளிமையான வாழ்வு வாழ்ந்தவர்
இ)அன்பு கசியும் நெஞ்சத்தில் ஆழமான நன்றியுணர்வு மிக்கவர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

39.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)தேவநேயப்பாவாணர் சென்னை மாவட்ட மைய நூலகம்
ஆ)பாவாணர் கோட்டம் - முறம்பு
இ)தேவநெயப் பாவாணர் முழு உருவச்சிலை - திருநெல்வேலி
ஈ)தேவநேயப் பாவாணர் நூலகம் - முறம்பு
விடை : இ)தேவநெயப் பாவாணர் முழு உருவச்சிலை - திருநெல்வேலி

40.1981- இல் மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் எந்த தலைப்பில் சொற் பொழிவாற்றித் தமிழன்னைக்கு பெருமைச் சேர்த்தார்
அ)மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்
ஆ)தமிழ் ஈழமும் தமிழ்நாடு தொடர்பும்
இ)தமிழ்மொழியில் வடமொழி கலப்பு
ஈ)தமிழ்மொழி முதன்மையான செம்மொழி
விடை : அ)மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்




No comments:

Post a Comment