Tuesday, 9 August 2016

42.TNPSC பொதுத்தமி

TNPSC பொதுத்தமிழ்
11.செங்குட்டுவன் தங்கம் வாங்குவித்தான்- எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)தன்வினை வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)பிறவினை வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : இ)பிறவினை வாக்கியம்

12.மன்னர்கள் பாவலரையும், நாவலரையும் பொன்னும் துகிலும் கொடுத்துப் போது - எவ்வகை வாக்கியம் எனக் சுட்டுக
அ)தொடர் வாக்கியம்
ஆ)உடன்பாட்டு வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : அ)தொடர் வாக்கியம்

13.நீருக்கு அழுத்தம் உண்டு - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)தனி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஈ)செய்தி வாக்கியம்

14.நேற்று பெருமழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஒடியது - எவ்வகை வாக்கியம்  எனச சுட்டுக
அ)தனி வாக்கியம்
ஆ)செய்வினை வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)கலவை வாக்கியம்

15.நாள்தோறும் நல்ல செயல்களைச் செய் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)உடன்பாட்டு வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கயிம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)கட்டளை வாக்கியம்

16.தன்வினை வாக்கியத்தை கண்டறிக
அ)கயல்விழி திருக்குறளை பயிலப்பட்டது
ஆ)கயல் விழி திருக்குறள் பயின்றாள்
இ)கயல் விழியால திருக்குறள் பயிற்றுவிக்கப் பட்டது
ஈ)கயல் விழை திருக்குறளை பயில் வித்தாள்
விடை : ஆ)கயல் விழி திருக்குறள் பயின்றாள்

17.செய்தினைச் சொற்றொடரைக் கண்டறிக
அ)இளமைவிருந்து திரு.வி.க. அவர்களால் இயற்றப்பட்டது
ஆ)திரு.வி.க இளமை விருந்தை இயற்றினார்
இ)இயற்றினார் இளமைவிருந்தை திரு.வி.க
ஈ)இளமைவிருந்து திரு.வி.க இயற்றுவத்தார்
விடை : ஆ)திரு.வி.க இளமை விருந்தை இயற்றினார்

18.செயல்பாட்டுவினை சொற்றொடரைக் கண்டறிக
அ)சேக்கிழார் சோழனால் வரவேற்கப்பட்டார்
ஆ)சேக்கிழாரை சோழன் வரவேற்றறான்
இ)சேக்கிழார் சோழனை வரவேற்றார்
ஈ)சோழன் சேக்கிழாரை வரவேற்றார்
விடை : அ)சேக்கிழார் சோழனால் வரவேற்கப்பட்டார்

19.செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக
அ)வகுப்பை மாணவர்கள் தூய்மை செய்தனர்
ஆ)வகுப்பு மாணவர்களால தூய்மை செய்யப் பட்டது
இ)தூய்மை மாணவர்கள் செய்தனர் வகுப்பை
ஈ)மாணவர்கள் வகுப்பை தூய்மை செய்தனர்
விடை : ஈ)மாணவர்கள் வகுப்பை தூய்மை செய்தனர்

20.உடும்புப் பிடிபோல உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)வாக்குவாதம்
ஆ)பிடிவாதம்
இ)கோபமடைவது
ஈ)கடும்வாதம்
விடை : ஆ)பிடிவாதம் 



No comments:

Post a Comment