Sunday, 7 August 2016

44.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.'பொன்னி இன்னிசை பாடினாள் " - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)உடன்பாட்டு வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : இ)செய்தி வாக்கியம்

32.'உள்ளவாளத் திறமை என்பது என்ன? - எவ்வகை வாக்கியம் எனச சுட்டுக
அ)தொடர் வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)தனி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : ஈ)வினா வாக்கியம்

33.'உண்மைக்கு அழிவில்லை அல்லவா?" எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)கட்டளை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : ஈ)வினா வாக்கியம்

34.'மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதினர்"
- எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)உணர்சசி வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)வினாவ வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : ஆ)செய்தி வாக்கியம்

35.'சிறந்த நூல்களை அரங்கேற்றுதல் பழைய கால வழக்கம் " - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)வினா வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)வியங்கொள் வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)செய்தி வாக்கியம்

36.'பகலவனைக் கண்ட பனி போல" - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)உயர்வு
ஆ)நடுக்கம்
இ)மறைவு
ஈ)பகை
விடை : இ)மறைவு

37.'சுதந்திரப் பறவை போல" - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)தியாகம்
ஆ)விரைவு
இ)கோபம்
ஈ)ஆனந்தம்
விடை : ஈ)ஆனந்தம்

38.'அடியற்ற மரம் போல்" - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளை தேர்ந்தெடுக்க
அ)வீழ்ந்து விடுவது
ஆ)நிலையாக நிற்பது
இ)தளிர்விடுவது
ஈ)காய் காப்பது
விடை : அ)வீழ்ந்து விடுவது

39.'கடலில் கரைத்த பெருங்காயம் போல" - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)மணமில்லை
ஆ)அறிவு மங்கியது
இ)நிறைவாதல்
ஈ)எதற்கும் பயனில்லை
விடை : ஈ)எதற்கும் பயனில்லை

40.'பசுமரத்தாணி போல" - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளை தேர்ந்தெடுக்க
அ)பதிந்தது
ஆ)ஒடிந்தது
இ)வளைந்தது
ஈ)முறிந்தது
விடை : அ)பதிந்தது




No comments:

Post a Comment