Tuesday, 16 August 2016

46.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.இவற்றில் குமரகுருபரர் இயற்றிய நூல் எது?
அ)சகலகலாவல்லி மாலை
ஆ)திருவாரூர் மும்மணிக்கோவை
இ)நீதிநெறி விளக்கம்
ஈ)இவை அனைத்தும்
 விடை : ஈ)இவை அனைத்தும்

62.பிள்ளைத்தமிழ் பற்றிய தவறான கூற்று எது?
அ)தொன்னூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று
ஆ)இறைவனை குழந்தையாக கருதி பாடப்பெற்றது
இ)ஆண்பாற் பிள்ளைத்தமிழ் மட்டுமே உண்டு
ஈ)நல்லாரை பாட்டுடைத் தலைவராக கொண்டது
விடை : இ)ஆண்பாற் பிள்ளைத்தமிழ் மட்டுமே உண்டு
  
63.முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழில் எங்கு எழுந்தரளியிருக்கும் முருகப் பெருமான் மீது பாடப்பட்டது?
அ)திருவானைக்காவல்
ஆ)திருச்செந்தூர்
இ)புள்ளிருக்குவேளுர்
ஈ)திருபெரும்குன்றம்
 விடை : இ)புள்ளிருக்குவேளுர்

64.உழவுத்தொழில் செய்து வாழும் பாமர மக்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையை சித்தரித்து கூறும் நூல்
அ)உலா
ஆ)கலம்பகம்
இ)பள்ளு
ஈ)பரணி
விடை : இ)பள்ளு
  
65.இவற்றில் பொருந்தமான இணை எது?
அ)குமரகுருபரர் - திருவைகுண்டம்
ஆ)செயங்கொண்டார் - தீபங்குடி
இ)சுந்தரர் - திருநாவலூர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
  
66.முத்தொள்ளாயிரத்தில் இந்த வேந்தனை பற்றிய பாடல் இடம்பெறவில்லை
அ)சேரன்
ஆ)சோழன்
இ)பாண்டியன்
ஈ)பல்லவன்
விடை : ஈ)பல்லவன்
  
67.முத்தொள்ளாயிரத்தில பெரும்பகுதி இந்த நூலின் வாயிலாக கிடைத்தது
அ)முக்டற்பள்ளு
ஆ)விக்கிரம சோழன் உலா
இ)புறத்திரட்டு
ஈ)நந்திக்கலம்பகம்
விடை : இ)புறத்திரட்டு
  
68.முத்தொள்ளாயிரம் பற்றிய இதில்தவறான கூற்று
அ)மூவேந்தர்கள் பற்றிய பாடல்கள் கொண்டது
ஆ)ஆசிரியர் புகழேந்திப்புலவர்
இ)சிறந்த இலக்கிய நயமும் கற்பனைவளமும்
ஈ)ஆட்சிச் சிறப்பு படைச்சிறப்பு கொடை பற்றியுள்ளது
விடை : ஆ)ஆசிரியர் புகழேந்திப்புலவர்
  
69.நெருங்கி அமைந்த இலைபோன்ற வடிவிலான வேலை உடையவர் யாரென் முத்தொள்ளாயிரம் கூறுகிறது
அ)சேரன்
ஆ)சோழன்
இ)பாண்டியன்
ஈ)அனைவரும்
விடை : இ)பாண்டியன்
  
70.சோழ மன்னன் எதனை காக்க தன் தசையை அளித்தான் என முத்தொள்ளயிரம் கூறுகிறது?
அ)பசு
ஆ)புறா
இ)மயில்
ஈ)காகம்
விடை : ஆ)புறா



No comments:

Post a Comment