Tuesday, 16 August 2016

48.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.இவற்றில் எந்த பாவகையை வயலின் வரப்பாக தமிழ்விடு தூது கூறுகிறது?
அ)ஆசிரியப்பா
ஆ)கலிப்பா
இ)வஞ்சிப்பா
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
  
82.தமிழ்விடும் தூது பற்றிய தவறான கூற்று எது?
அ)குட்டுவதற்கு அதிவீரராம பாண்டியன்
ஆ)கண்ணை குருடாக்க கம்பன்
இ)செவியை அறுக்க வில்லிபுத்தூரான்
ஈ)தலையை வெட்ட ஒட்டக்த்தன்
விடை : ஆ)கண்ணை குருடாக்க கம்பன்
  
83.பயிர்களின் இடையே வளரும் களை எதுவென தமிழ்விடு தூது உரைக்கிறது?
அ)கள்வர்கள்
ஆ)கொலைத்தொழில் செய்வோர்
இ)போலிப்புலவர்கள்
ஈ)வஞ்சக மனிதர்கள்
விடை : இ)போலிப்புலவர்கள்

84.கலிங்கத்து பரணியில் எதன் வாய் வெந்து உலர்ந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது?
அ)செந்நாய்
ஆ)மான்
இ)குதிரை
ஈ)யானை
விடை : ஆ)மான்
  
85.நந்திக்கலம்பகம் பாட்டுடைத்தலைவன் யார்?
அ)முதலாம் நந்திவர்மன்
ஆ)இரண்டாம் நந்திவர்மன்
இ)மூன்றாம் நந்திவர்மன்
ஈ)முதலாம் மகேந்திரவர்மன்
விடை : இ)மூன்றாம் நந்திவர்மன்

86.நந்தி கலம்பகம் பற்றிய தவறான கூற்று எது?
அ)கலம்பக நூலில் முதல் நூல்
ஆ)சிற்றிலக்கியங்களுள் ஒன்று
இ)கலந்து இயற்றப்பெறும் நூல் கலம்பகம்
ஈ)காலம் இரண்டாம் நூற்றாண்டு
விடை : ஈ)காலம் இரண்டாம் நூற்றாண்டு
  
87.சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை கூறும் நூல்?
அ)பன்னிரு பாட்டியல்
ஆ)வச்சணந்தி மாலை
இ)அலங்கார பஞ்சாகம்
ஈ)அ மற்றம் ஆ
விடை : ஈ)அ மற்றம் ஆ
  
88.இவற்றில் சிற்றிலக்கியங்கள் பற்றிய சரியான கூற்று எது?
அ)வடமொழியல் சிற்றிலக்கியங்கள் பிரபந்தங்கள் எனப்படும்
ஆ)நாயக்கர் காலம் சிற்றிலக்கிய காலம்
இ)சற்றிலக்கயிங்கள் தொன்னூற்றியாறு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
  
89.முத்தொள்ளாயிரம் பற்றிய சரியான கூற்று எது?
அ)வனப்பு வகையை சேர்ந்தது
ஆ)முவேந்தர்களின் பெயரை குறிப்பிடாமல் பொதுவாக குறிப்பிடுகிறது
இ)ஆசிரியர் பெயர் தெரியவில்லை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
  
90.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)அழகர் கிள்ளைவிடு தூது - பல பட்டடைச் சொக்கநாத பிள்ளை
ஆ)முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
இ)பெத்தலோகம் குறுவஞ்சி - தஞ்சை வேதநாயக சாத்தியார்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
  
91.அழகிய சொக்கநாதர் பிறந்த ஊர்
அ)வாசுதேவ நல்லூர்
ஆ)தச்சநல்லூர்
இ)குடந்தை
ஈ)அருப்புக்கோட்டை
விடை : ஆ)தச்சநல்லூர்
  



No comments:

Post a Comment