Sunday, 7 August 2016

49.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)இறந்தகாலம்
ஆ)நிகழ்காலம்
இ)கார்காலம்
ஈ)எதிர்காலம்
விடை : இ)கார்காலம்

82.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)ஆரண்ய காண்டம்
ஆ)கிட்கிந்தா காண்டம்
இ)சுந்தர காண்டம்
ஈ)வஞ்சிக் காண்டம்
விடை : ஈ)வஞ்சிக் காண்டம்

83.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)இராமன்
ஆ)இலக்குவன்
இ)பரதன்
ஈ)இராவணன்
விடை : ஈ)இராவணன்

84.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)பரணி
ஆ)பிள்ளைத்தமிழ்
இ)அந்தாதி
ஈ)கலித்தொகை
விடை : ஈ)கலித்தொகை

85. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)இயேசு காவியம்
ஆ)இரட்சணிய யாத்திரிகம்
இ)இரட்சணிய மனோகரம்
ஈ)இரட்சணியக் குறள்
விடை : அ)இயேசு காவியம்

86.மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக
அ)எங்கள் தோட்டத்தில் வாழைச் செடியும்,புடலைச் செடியும் உள்ளன
ஆ)எங்கள் தோட்டத்தில் வாழை மரமும்,புடலைக் கொடியும் உள்ளன
இ)எங்கள் தோட்டத்தில வாழைச் செடியும்,புடலைக் கொடியும் உள்ளன
ஈ)எங்கள் தோட்டத்தில் வாழை மரமும் ,புடலைச் செடியும் உள்ளன.
விடை : ஆ)எங்கள் தோட்டத்தில் வாழை மரமும்,புடலைக் கொடியும் உள்ளன

87.சந்திப்பிழை இல்லாத் தொடரைத் தேர்க
அ)சிதம்பரனார் செய்நன்றி மறவாச் செம்மல்
ஆ)சிதம்பரனார் செய்ந்நன்றி மறவா செம்மல்
இ)சிதம்பரனார் செய்ந்நன்றி மறவாச் செம்மல்
ஈ)சிதம்பரனார் செய்நன்றி மறவா செம்மல்
விடை : ஆ)சிதம்பரனார் செய்ந்நன்றி மறவா செம்மல்

88.வழூச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
அ)எண்ணெய் விலை குறைந்து விட்டது
ஆ)எண்னை வெலை குறைந்து விட்டது
இ)எள்நெய் விலை குறைஞ்சு விட்டது
ஈ)எண்ண வெல குறஞ்சு விட்டது
விடை : அ)எண்ணெய் விலை குறைந்து விட்டது

89.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
அ)கல்வி மந்திரி நன்றாகப் பேசினார்
ஆ)கல்வி அமைச்சர் நன்றாகப் பேசினார்
இ)கல்வி மினிஸ்டர் நன்றாகப் பேசினார்
ஈ)எஜுகேசன் மினிஸ்டர் நன்றாகப் பேசி
விடை : ஆ)கல்வி அமைச்சர் நன்றாகப் பேசினார்

90.ஒருமைப் பன்மை பிழைகளை நீக்குக
அ)இந்தியர்களிடம் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறமை இரக்கிறது
ஆ)இந்தியர்களிடம் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறமை இருக்கிறது
இ)இந்தியனிடம் எதையும் எளிதில புரிந்துகொள்ளும் திறமை இருக்கின்றனர்
ஈ)இந்தியர்களிடம் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறமை இருக்கின்றான்
விடை : ஆ)இந்தியர்களிடம் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறமை இருக்கிறது




No comments:

Post a Comment