Thursday, 11 August 2016

4.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)கஜமுகனை வழிப்பட்டேன்
ஆ)கசமுகனை வழிப்பட்டேன்
இ)கயமுகனை வழிப்பட்டேன்
ஈ)யானை முகனை வழிப்பட்டேன்
விடை : ஈ)யானை முகனை வழிப்பட்டேன்

32.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)புஸ்தகம் படித்தேன்
ஆ)நூல் படித்தேன்
இ)புத்தகம் படித்தேன்
ஈ)பாடம் படித்தேன்
விடை : ஈ)பாடம் படித்தேன்

33.ஹோட்டல் என்ற பிறமொழிச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெழுது
அ)ஒட்டல்
ஆ)உணவகம்
இ)தொழிலகம்
ஈ)மருந்தகம்
விடை : ஆ)உணவகம்

34.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)ஜல்தி ஆவ்
ஆ)ஜல்தி வா
இ)விரைந்து வா
ஈ)ஸ்பீடா வா
விடை : இ)விரைந்து வா

35.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)குடிப்பதற்குச் சலம் கொடு
ஆ)குடிப்பதற்குப் பானம் கொடு
இ)குடிப்பதற்குத் தண்ணீர் கொடு
ஈ)குடிப்பதற்கு ஜலம் கொடு
விடை : இ)குடிப்பதற்குத் தண்ணீர் கொடு

36.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)பஜாரில் பேக் வாங்கினேன்
ஆ)கடையில் பேக் வாங்கினேன்
இ)கடையில் பை வாங்கினேன்
ஈ)கடைவீதியில் பை வாங்கினேன்
விடை : இ)கடையில் பை வாங்கினேன்

37.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)கும்பாயிஷேகம் முடிந்தவுடன் எல்லோரும் இறைவனுக்கு நமஸ்காரம் செய்தனார்
ஆ)குடமுழுக்கு விழா முடிந்தவுடன் எல்லோரும் இறைவனுக்கு வணக்கம் செய்தனர்
இ)கடமுழுக்கு விழா முடிந்தவுடன் எல்லோரும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினர்
ஈ)கும்பாயிஷேகம் முடிந்ததும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து நமஸ்காரம் செய்தார்கள்
விடை : ஆ)குடமுழுக்கு விழா முடிந்தவுடன் எல்லோரும் இறைவனுக்கு வணக்கம் செய்தனர்

38.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)மனிதன் ஜீவித காலத்தில் சந்தோஷமான விஷயங்களை எண்ணினான்
ஆ)மனிதன் உயிர் வாழ்ந்த காலத்தில் சந்தோஷமான விஷயங்களை எண்ணினான்
இ)மனிதன் தன் வாழ்நாளில் இன்பமான நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்தான்
ஈ)மனிதன் தன் வாழ்நாளில் சந்தோஷமான விஷயங்களை எண்ணிப் பார்த்தான்
விடை : இ)மனிதன் தன் வாழ்நாளில் இன்பமான நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்தான்

39.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)ரவுடி மாழுல் கேட்டான்
ஆ)குண்டன் கையூட்டு கேட்டான்
இ)அடியாள் மாமுல் கேட்டான்
ஈ)ரவுடி ஆட்கள் மாழுல் கேட்டனர்
விடை : ஆ)குண்டன் கையூட்டு கேட்டான்

40.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)பஸ்ஸில் ஏறி ஆஸ்பத்திரிக்குச் சென்று டாக்டரைப் பார்த்தேன்
ஆ)பஸ்ஸில் ஏறி மருத்துவனைக்குச் சென்று டாக்டரைப் பார்த்தேன்
இ)பேருந்தில் ஏறி ஆஸ்பத்திரிக்குக் சென்று மருத்துவரைப் பார்த்தேன்
ஈ)பேருத்தில் ஏறி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைப் பார்த்தேன்
விடை : ஈ)பேருத்தில் ஏறி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைப் பார்த்தேன்




No comments:

Post a Comment