Friday, 12 August 2016

4.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
திருக்குறள் ஒர் அற இலக்கியம்
அ)திருக்குறள் சங்க இலக்கியமா?
ஆ)திருக்குறள் இரண்டு வரி இலக்கியமா?
இ)திருக்குறள் என்பது எந்த வகை இலக்கியம்?
ஈ)திருக்குறளின் பிரிவுகள் யாவை?
விடை : இ)திருக்குறள் என்பது எந்த வகை இலக்கியம்?

22.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்திடுக
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்
அ)திருவள்ளுவர் இயற்றிய நூல் யாது?
ஆ)திருக்குறளை இயற்றியவர் யார்?
இ)திருவள்ளுவர் எந்நூலை இயற்றினார்?
ஈ)திருக்குறளை இயற்றியவர் திரவள்ளுவரா?
விடை : ஆ)திருக்குறளை இயற்றியவர் யார்?

23.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
உடற்பயிற்சி உடலை வலிமையாக்கும்
அ)உடற்பயிற்சி எச்வது ஏன்?
ஆ)உடற்பயிற்சியின் பயன்  என்ன?
இ)உடற்பயிற்சியின் பலன் யாது?
ஈ)உடற்பயிற்சியினால் நன்மை உண்டா?
விடை : இ)உடற்பயிற்சியின் பலன் யாது?

24.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
நான்கு மாடுகள் உழுகின்றன.
அ)எத்தனை மாடுகள் உழுகின்றன?
ஆ)எவ்வளவு மாடுகள் உழுகின்றன?
இ)யாவருடைய மாடக்ள உழுகின்றன?
ஈ)நான்கு மாடுகள் என்ன செய்கின்றன?
விடை : அ)எத்தனை மாடுகள் உழுகின்றன?

25.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
மைதானத்தில் குதிரைகள் ஒடுகின்றன.
அ)மைதானத்தில் யார் ஒடுகிறார்
ஆ)மைதானத்தில் எவை ஒடுகின்றன?
இ)மைதானத்தில் எது ஒடுகிறது?
ஈ)நான்கு மாடுகள் என்ன செய்கின்றன?
விடை : ஆ)மைதானத்தில் எவை ஒடுகின்றன?

26.படித்தவர் வெற்றி பெறுவர்
அ)யார் வெற்றி பெறுவர்?
ஆ)வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
இ)வெற்றி பெற படிக்க வெண்டுமா?
ஈ)படித்தால் மட்டும் வெற்றி பெற முடியுமா?
விடை : அ)யார் வெற்றி பெறுவர்?

27.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக
தமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சாவூரில் உள்ளது.
அ)தஞ்சாவூரில் உள்ளது என்ன?
ஆ)தஞ்சாவூரில் உள்ளது தமிழ்ப்பல்கலைக் கழகம்?
இ)தமிழ்ப் பல்கலைக் கழகம் எங்குள்ளது?
ஈ)தஞ்சையிலவ் உள்ளதோ தமிழ்ப் பல்கைலக் கழகம்?
விடை : இ)தமிழ்ப் பல்கலைக் கழகம் எங்குள்ளது?

28.பொருந்தும் வினாவைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுக
அடக்கம் முதலிய குணங்கள் அமைந்த ஒன்று
பெண்மையாகும்
அ)பெண்மை என்பது சிறந்ததா?
ஆ)பெண்மை என்பது வேண்டுமா?
இ)பெண்ணைப் போற்ற என்ன செய்ய வேண்டும்?
ஈ)பெண்மையாவது யாது?
விடை : ஈ)பெண்மையாவது யாது?

29.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்து வட்டமிடுக தாய்ப்பால் என்பதே
இயற்கை புட்டிப்பால் என்பது செயற்கை
அ)இயற்கை எது? செயற்கை எது?
ஆ)புட்டிபால ;சிறந்ததா?தாய்ப்பால் சிறந்ததா?
இ)புட்டிப்பாலை என்ன செய்ய வேண்டும்?
ஈ)தாய்ப்பாலை என்ன செய்ய வேண்டும்?
விடை : அ)இயற்கை எது? செயற்கை எது?

30.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
மாலையில் விளையாட வேண்டும்
அ)மாலையில் விளையாட வேண்டும்
ஆ)எங்கே விளையாட வெண்டுமா?
இ)எப்பொழுது விளையாட வெண்டும்?
ஈ)எப்பொழுது விளையாட என்ன செய்ய வேண்டும்?
விடை : இ)எப்பொழுது விளையாட வெண்டும்?




No comments:

Post a Comment