Thursday, 4 August 2016

5.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக 'தா"
அ)பறித்தல்
ஆ)தருதல்
இ)கேட்டல்
ஈ)பார்த்தல்
விடை : ஆ)தருதல்

52.உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க 'ஆ"
அ)ஆசை
ஆ)ஆடு
இ)பசு
ஈ)ஆழம்
விடை : இ)பசு

53.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக 'கோ"
அ)அரண்மனை
ஆ)அரசன்
இ)அமைச்சு
ஈ)அரண்
விடை : ஆ)அரசன்

54.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிதல் 'தை"
அ)வாரம்
ஆ)கிழமை
இ)மாதம்
ஈ)வருடம்
விடை : இ)மாதம்

55.ஒரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல் 'நா"
அ)நாடு
ஆ)நாடி
இ)நார்
ஈ)நாக்கு
விடை : ஈ)நாக்கு

56.'நின்றார்" - வேர்ச் சொல்லைக் காண்க
அ)நின்
ஆ)நில்
இ)நின்று
ஈ)நின்று
விடை : ஆ)நில்

57.வேர்ச் சொல்லைத் தேர்வு செய்க 'தின்றான்"
அ)தின்று
ஆ)தின்ற
இ)தின்
ஈ)தின்னு
விடை : இ)தின்

58.'கொண்டான்" என்ற சொல்லின் வேர்ச் சொல்
அ)கொண்
ஆ)காண்
இ)கொள்
ஈ)கொல்
விடை : இ)கொள்

59.'கண்டான்" - இதன் வேர்ச் சொல்லினை எழுதுக
அ)கண்
ஆ)கண்டு
இ)கண்ட
ஈ)காண்
விடை : ஈ)காண்

60.'பாடினார்" என்ற சொல்லின் வேர்ச் சொல்லை அறிக
அ)படி
ஆ)படித்து
இ)பாடு
ஈ)பாடி
விடை : இ)பாடு



No comments:

Post a Comment