Sunday, 7 August 2016

5.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.'வேலியே பயிரை மேய்வது போல"
-இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிக
அ)பாதுகாத்தல்
ஆ)கட்டுதல்
இ)மீறுதல்
ஈ)மிதித்தல்
விடை : இ)மீறுதல்

42.'இடியோசை கேட்ட நாகம் போல்"
- இவ்வுமையால் விளக்கப்பெறும் பொருளை அறிக
அ)அழுகை
ஆ)அச்சம்
இ)கோபம்
ஈ)பரிதவிப்பு
விடை : ஆ)அச்சம்

43.'அத்தி பூத்தார் போல"
- இவ்வுமையால் விளக்கபெறும் பொருளை அறிக
அ)எளிமை
ஆ)அருமை
இ)பெருமை
ஈ)சிறுமை
விடை : ஆ)அருமை

44.'உள்ளங்கை நெல்லிக்கனி போல"
- இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிக
அ)நல்லோர் கூறும் வார்த்தைகள்
ஆ)தெள்ளத் தெளிவாகத்தெரிதல்
இ)தன் கையே உதவுதல்
ஈ)சிறியன செய்தல்
விடை : ஆ)தெள்ளத் தெளிவாகத்தெரிதல்

45.'பூவுடன் சேர்ந்த நாரும் மணப்பது போல"
- இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை அறிக
அ)புகழ்
ஆ)இன்பம்
இ)அவலம்
ஈ)போற்றுதல்
விடை : அ)புகழ்

46.பின்வரும் தொடரில் அமைந்த மோனையை எழுதுக
'அங்கொன்றும் இங்கொன்றும் முன்னர்த் தோன்றி அடுத்த நொடி வான் நிறையும் விண்மீன் கூட்டம்"
அ)அங்கொன்றும் - இங்கொன்றும்
ஆ)அங்கொன்றும் - வான்நிறையும்
இ)அங்கொன்றும் - அடுத்தநொடி
ஈ)அங்கொன்றும் - வீண்மீன் 4ட்டம்
விடை : இ)அங்கொன்றும் - அடுத்தநொடி

47.'இமயப் பொருப்பில் விளையாமு;
இளமென் பிடியே விடைக்கேற்ற வினாவைத் தோந்தெடுத்தல் ! எறிதரங்கம்" - சீர் மோனை அறிக
அ)இமய  - இளமென
ஆ)பிடியே - எறிதரங்கம்
இ)இளமென் - விளையாடும்
ஈ)பொருப்பில் - இமய
விடை : அ)இமய  - இளமென

48.'முனிபவர் அரக்கியர் முறையின் நீங்கினாள் இனி அவள் தானலா தியாரும் இல்லையால் - சீர்எதுகை தேர்க
அ)முனிபவர் - முறை
ஆ)இனிஅவள் - அரக்கியர்
இ)தானலா - தியாரும் 
ஈ)முனிபவர் - இனிஅவள்
விடை : ஈ)முனிபவர் - இனிஅவள்

49.பின்வரும் தொடரில் அமைந்த எதுகையை எழுதுக
'மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம் பண்தேய்த்த மொழியனார் ஆயத்து"
அ)மண்தேய்த்தல - பண்தேய்த்த
ஆ)புகழினான்  - ஆயத்து
இ)மதிமுக   - மொழியினார்
ஈ)மடவார்  - மதிமுக
விடை : அ)மண்தேய்த்தல - பண்தேய்த்த

50.'அலைபட்ட மனதிற்கு அமைதிக்கு வழியாம்
மலையுச்சி ஒளியன்ன மறவற்ற் மொழியாம்"
- இதிலுள்ள இயைபுத் தொடையை எழுதுக
அ)மனத்றிகு   - அமைதிக்கு
ஆ)மலையுச்சி - அலைபட்ட
இ)வழியாம்  - மொழியாம்
ஈ)ஒளியன்ன - மறவைற்ற
விடை :இ)வழியாம்  - மொழியாம்




No comments:

Post a Comment