Monday, 1 August 2016

6.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.'பார்" என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர்
அ)பார்த்து
ஆ)பார்த்தல்
இ)பார்த்தான்
ஈ)பார்த்தவன்
விடை : ஆ)பார்த்தல்
12.'சமை" என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக் காண்க
அ)சமைத்தவன்
ஆ)சமைத்தான்
இ)சமைத்து
ஈ)சமைத்தல்
விடை : அ)சமைத்தவன்
13.'உண்" என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் காண்க
அ)உண்ட
ஆ)உண்ணுதல்
இ)உண்டான்
ஈ)உண்டு
விடை : ஈ)உண்டு
14.'கல்" என்பதன் தெரிநிலை வினைமுற்று
அ)கற்றான்
ஆ)கற்று
இ)கற்ற
ஈ)கற்றல்
விடை : அ)கற்றான்
15.சரியான வினைமுற்றை உருவாக்குக: 'எழு"
அ)எழுந்து
ஆ)எழுந்த
இ)எழுக
ஈ)எழுந்தான்
விடை : ஈ)எழுந்தான்
16.சரியான வினையெச்சம் காண 'படி"
அ)படித்தான்
ஆ)படிப்பு
இ)படித்து
ஈ)படித்தாள்
விடை : இ)படித்து
17.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)கிளி,கூகை,கொக்கு,கீரி
ஆ)கீரி,கூகை,கொக்கு,கிளி
இ)கிளி,கீரி,கூகை,கொக்கு
ஈ)கிளி,கொக்கு,கீரி,கூகை
விடை : இ)கிளி,கீரி,கூகை,கொக்கு
18.அகர வரிசைப்படி சொற்களை கண்டுபிடிக்கவும்
அ)உணரத்தல்,கூறுதல்,செப்புதல்,சொல்லுதல்
ஆ)உரைத்தல்,சொல்லுதல்,செப்புதல்,கூறுதல்
இ)சொல்லுதல்,கூறுதல்,செப்புதல்,உரைத்தல்
ஈ)உரைத்தல்,செப்புதல்,சொல்லுதல்,கூறுதல்
விடை : அ)உணரத்தல்,கூறுதல்,செப்புதல்,சொல்லுதல்
19.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)உண்டல்,நக்கல்,பருகல்,தின்னல்
ஆ)உண்டல்,தின்னல்,நக்கல்.பருகல்
இ)உண்டல்,பருகல்,நக்கல்,தின்னல்
ஈ)உண்டல்,பருகல்,தின்னல்,நக்கல்
விடை : ஆ)உண்டல்,தின்னல்,நக்கல்.பருகல்
20.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்ததைத் தேர்வு செய்க
அ)வதனம்,வான்மதி,வீரர்,வெற்றி
ஆ)வான்மதி,வதனம்,வெற்றி,வீரம்
இ)வதனம்,வீரம்,வான்மதி,வெற்றி
ஈ)வெற்றி,வீரம்,வதனம்,வான்மதி
விடை : அ)வதனம்,வான்மதி,வீரர்,வெற்றி



No comments:

Post a Comment