Tuesday, 9 August 2016

6.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.எந்தை - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)வினைச்சொல்
ஆ)மரூஉச்சொல்
இ)பெயர்ச்சொல்
ஈ)உரிச்சொல்
விடை : ஆ)மரூஉச்சொல்

52.அசைவிலா - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆ)வினைமுற்று
இ)அடுக்குத் தொடர்
ஈ)பண்புத் தொகை
விடை : அ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

53.எழு பிறப்பும் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)உம்மைத் தொகை
ஆ)முற்றும்மை
இ)எண்ணும்மை
ஈ)சிறப்பும்மை
விடை : ஆ)முற்றும்மை

54.நகையும் உவகையும் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)உம்மைத் தொகை
ஆ)இழிவு சிறப்பும்மை
இ)எண்ணும்மை
ஈ)வினைத்தொகை
விடை : இ)எண்ணும்மை

55.திறன் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)ஈற்றுப் போலி
ஆ)தொழிற்பெயர்
இ)ஆகுபெயர்
ஈ)வினையெச்சம்
விடை : அ)ஈற்றுப் போலி

56.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'பாரதியார் பாட்டினில் நெஞ்சைப் பறிகொடுத்தார்"
அ)பாரதியார் யார்?
ஆ)பாட்டு என்பது என்ன?
இ)நெஞ்சில் இருப்பது என்ன?
ஈ)பாரதியார் எதில் நெஞ்சைப் பறிகொடுத்தார்?
விடை : ஈ)பாரதியார் எதில் நெஞ்சைப் பறிகொடுத்தார்?

57.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழைப் பாடியவர் குமரகுருபரர்"
அ)மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழைப் பாடியவர் யார்?
ஆ)பிள்ளைத் தமிழ் என்றால் என்ன?
இ)மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் சிற்றிலக்கியமா?
ஈ)குமரகுருபரர் எங்கு வாழ்ந்தார்?
விடை : அ)மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழைப் பாடியவர் யார்?

58.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'சான்றோர்களால் அருளிய நல்லுரைகளே
அறிவுரைகள் என அழைக்கப்பட்டன"
அ)சான்றோர் நல்லுரைகளை அருளினார்கள் ?
ஆ)நல்லுரைகள் பக்தி நூல்களா?
இ)சான்றோரின் குணங்கள் யாவை?
ஈ)சான்றோர் நல்லுரைகள் எப்படி அழைக்கப்பட்டன?
விடை : ஈ)சான்றோர் நல்லுரைகள் எப்படி அழைக்கப்பட்டன?

59.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'இராமாயணத்தின் ஐந்தாவது காண்டம் சுந்தர காண்டம்"
அ)சுந்தர காண்டம இடம்பெற்ற நூல் இராமாயணமா?
ஆ)இராமாயணத்தின் நை;தாவது காண்டம் எது?
இ)ஐந்தாவது காண்டம் சுந்தர காண்டமா?
ஈ)சுந்தர காண்டத்தின் சிறப்பு யாது?
விடை : ஆ)இராமாயணத்தின் நை;தாவது காண்டம் எது?

60.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'உலகில் மக்களால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை என்பார் வ.உ.சிதம்பரனார்'
அ)ஆகாத காரியம் எது?
ஆ)உலகில் எது ஒன்றுமில்லை?
இ)வ.உ.சிதம்பரனார் உலக மக்கள் பற்றி உரைப்பது யாது ?
ஈ)உன்றுமில்லை என்பது எதனைக் குறிக்கும் ?
விடை : இ)வ.உ.சிதம்பரனார் உலக மக்கள் பற்றி உரைப்பது யாது ?



No comments:

Post a Comment