Monday, 15 August 2016

7.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.'சிரி" என்ற வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக
அ)சிரித்தான்
ஆ)சிரித்து
இ)சிரிக்க
ஈ)சிரிக்பு
விடை : ஆ)சிரித்து

62.'மொழி" என்ற வேர்ச்சொல்லின் எதிர்மறை வினைமுற்று தருக
அ)மொழிவான்
ஆ)மொழியா
இ)மொழிந்திலன்
ஈ)மொழிதல்
விடை : இ)மொழிந்திலன்

63.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக: 'உருள்"
அ)உருள்க
ஆ)உருண்டு
இ)உருண்ட
ஈ)உருண்டது
விடை : இ)உருண்ட

64.'சா" என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர்
அ)சாக்காடு
ஆ)சாவான்
இ)சாகும்
ஈ)சாகின்றவன்
விடை : அ)சாக்காடு

65.'எழுது'என்ற வேர்ச்சொல்லை வினை முற்றாக்குக
அ)எழுதினான்
ஆ)எழுதியவனை
இ)எழுதிய
ஈ)எழுது
விடை : அ)எழுதினான்

66.'வேண்டு"என்ற வேர்ச்சொல்லை தொழிற் பெயராக மாற்றுக
அ)வேண்டுதல்
ஆ)வேண்டுவார்
இ)வேண்டும்
ஈ)வேண்டிய
விடை : அ)வேண்டுதல்

67.வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக: 'சொல்"
அ)செல்லுதல்
ஆ)சொல்லினார்
இ)சொன்னவளை
ஈ)சொன்னவனை
விடை : ஆ)சொல்லினார்

68.'இயல்பு"என்பதன் வினையெச்சம் யாது?
அ)இயம்பி
ஆ)இயம்பினான்
இ)இயம்பிய
ஈ)இயம்புதல்
விடை : அ)இயம்பி

69.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக:
அ)வந்தது
ஆ)வந்தவனை
இ)வருதல்
ஈ)வருகை
விடை : ஆ)வந்தவனை

70.'கொதி" என்பதன் தொழிற்பெயர் காண்க
அ)கொதித்தது
ஆ)கொதித்தன
இ)கொதித்தல்
ஈ)கொதித்தனர்
விடை : இ)கொதித்தல்




No comments:

Post a Comment