Wednesday, 3 August 2016

7.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.'அழி" என்னும் வேர்ச்சொல்லிற்கு எதிர்மறை விடையறிக
அ)அழியா
ஆ)அழிப்பாய்
இ)அழித்தல்
ஈ)அழித்தான்
விடை : அ)அழியா

42.வேர்ச்சொல்லை வியங்கோள் வினைமுற்றாக்குக 'பெறு"
அ)பெற்ற
ஆ)பெறும்
இ)பெறுக
ஈ)பெற்றான்
விடை : இ)பெறுக

43.'செல்" என்னும் வேர்ச்சொல்லினை வினையாலணையும் பெயராக்குக
அ)சென்றவன்
ஆ)சென்றனர்
இ)சென்றான்
ஈ)செல்லுதல்
விடை : அ)சென்றவன்

44.'இமிழ்திரை"இலக்கண குறிப்பு காண்
அ)இடுக்குத்தொடர்
ஆ)உம்மைத்தொகை
இ)உருவகம்
ஈ)வினைத்தொகை
விடை : ஈ)வினைத்தொகை

45.'வேல்கண்" இலக்கண குறிப்பு காண்க
அ)உருவகம்
ஆ)வினைத்தொகை
இ)உவமைத்தொகை
ஈ)பண்புத்தொகை
விடை : இ)உவமைத்தொகை

46.'நல்வழி" இலக்கண குறிப்பு கண்டறிக
அ)பண்புத்தொகை
ஆ)உவமைத்தொகை
இ)வினைத்தொகை
ஈ)உருவகம்
விடை : அ)பண்புத்தொகை

47.'சொலல்" என்பதன் இலக்கணக் குறிப்பு கண்டறிக
அ)அடுக்குத்தொடர்
ஆ)தொழிற்பெயர்
இ)வினையாலணையும் பெயர்
ஈ)வியங்கோள் வினைமுற்று
விடை : ஆ)தொழிற்பெயர்

48.'பொருங்கடல்" என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு காண்
அ)பண்புத்தொகை
ஆ)உவமைத்தொகை
இ)வினைத்தொகை
ஈ)தொழிற்பெயர்
விடை : அ)பண்புத்தொகை

49.இயைபுத்தொடையினைக் கண்டறிக
'கொடுமையடா மண்ணில் சிலருண்டு வாழல் வயிற்றுக் கூழுக்கும் வழியற்று பாட்டாளி தாழல்"
அ)கூழுக்கும் - தாழல்
ஆ)கொடுமையடா - பட்டாளி
இ)வாழல் - தாழல்
ஈ)வயிற்றுக் - வழியற்று
விடை : இ)வாழல் - தாழல்

50.எதுகை சொற்களைக் கண்டறிக
'நெஞ்சை ஒளித்து ஒரு வங்சகம் இல்லை"
அ)ஒளித்து - இரு
ஆ)நெஞ்சை - வஞ்சகம்
இ)நெஞ்சை - இல்லை
ஈ)வஞ்சகம் - இல்லை
விடை : ஆ)நெஞ்சை - வஞ்சகம் 



No comments:

Post a Comment