Friday, 12 August 2016

8.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.எவ்வகை வாக்கியம் என்பதைக் கண்டெழுது
வள்ளுவர் கோட்டம மிகவும் அழகாக அமைந்துள்ளது.
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)வியங்கோள் வாக்கியம்
விடை : இ)செய்தி வாக்கியம்

62.தமிழிலே கலைச் சொற்கள் உருவாக வேண்டும்
இத்தொடர் என்ன வாக்கியம் எனத் தேர்க.
அ)கட்டளை வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)உணர்;ச்சி வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஈ)செய்தி வாக்கியம்

63.தமிழிசையின் சிறப்பை அனைவரும் அறிவர்
இது எவ்வகை வாக்கியம்?
அ)நேர்க்ற்று வாக்கியம்
ஆ)அயற்ற்று வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஈ)செய்தி வாக்கியம்

64.எவ்வகை வாக்கியம் என்பதைக் கண்டெழுது
நீரும் அழுத்தம் உண்டு
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)தன்வினை வாக்கியம்
விடை : இ)செய்தி வாக்கியம்

65.இளமையில் கல் இது எவ்வகை வாக்கியம்
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : ஆ)கட்டளை வாக்கியம்

66.காலையில் படி எவ்வகை வாக்கியமெனக் காண்க
அ)கட்டளை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : அ)கட்டளை வாக்கியம்

67. நாள்தோறும் திருக்குறளைப் படி- இது எவ்வகை வாக்கயிம்?
அ)வினா வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)உணர்ச்சி  வாக்கியம்
விடை : இ)கட்டளை வாக்கியம்

68.எவ்வகை வாக்கியம் எனக் காண்க
காலைக் கதிரவன் கடலில் தோன்றும் காட்சியைக் காண்பாயாக
அ)வினா வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : ஈ)கட்டளை வாக்கியம்

69.எவ்வகை வாக்கியமெனக் கண்டறிக
நாடு காக்கப் போரிடு
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)உடன்பாட்டு வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : இ)கட்டளை வாக்கியம்

70.எவ்வகை வாக்கியமெனக் கண்டறிக
முயன்றால் முடியாததும் உண்டோ?
அ)விழைவு வாக்கியம்
ஆ)தனி வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : இ)வினா வாக்கியம்



No comments:

Post a Comment