Thursday, 4 August 2016

8.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.'காரண்மை போல ஒழுகுதல்" இவ்வுவமையால் அறியலாகும் பொருள்
அ)வள்ளண்மை
ஆ)மழை
இ)ஒழுக்கம்
ஈ)கார்
விடை : அ)வள்ளண்மை

82.உவமையால் அறியப்படும் பொருள் எழுதுக
'செய்தி காட்டுத் தீ போல பரவியது"
அ)விரைவு
ஆ)துன்பம்
இ)வேதனை
ஈ)பயனின்மை
விடை : அ)விரைவு

83.உவமையால் விளக்கப் பெறும் பொருளை எழுதுக 'அரண்மனை மாதிரி வீடு"
அ)சிறியது
ஆ)குறுகியது
இ)இருண்டது
ஈ)பெரியது
விடை : ஈ)பெரியது

84.உவமையால் விளக்கப்படும் பொருளை எழுதுக
'கடுகுபோல் உள்ளம் கொண்டோன்"
அ)பெருமை
ஆ)சீர்மை
இ)சிறுமை
ஈ)நீர்மை
விடை : ஆ)சீர்மை

85.'இலவு காத்த கிளி போல" - என்னும்
உவமையால் விளக்கப்டும் பொருள்
அ)பறந்துபோதல்
ஆ)ஏமாந்து போதல்
இ)மறந்து போதல்
ஈ)மகிழ்ந்து போதல்
விடை : ஆ)ஏமாந்து போதல்

86.இயைபுத் தொடையை எடுத்துக் கூறுக
'பொதியிலாயினும் இமய் மயரினும்"
அ)பொதியிலாயினும் - பொதுவறு
ஆ)பொதுவறு- சிறப்பின்
இ)இமயலாயினும் - புகாரேயாயினும்
ஈ)சிறப்பின் - இமயமாயினும்
விடை : இ)இமயலாயினும் - புகாரேயாயினும்

87.'பல்பொருள் வெஃகுஞ் சிறுமையும் இம்மூன்றும் செல்வ முடைக்கும் படை"
இதில் அமைந்துள்ள எதுகையினை அறிக
அ)பல்பொருள் - செல்வம்
ஆ)வெஃகும் - சிறுமையும்
இ)செல்வம் - இம்மூன்றும்
ஈ)பல்பொருள் - வெஃகும்
விடை : அ)பல்பொருள் - செல்வம்

88.'வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா"
என்ற தொடரில் அமைந்துள்ள மோனைச் சொற்கள் அறிக
அ)வசையிலா - குன்றும்
ஆ)வண்பயன் - இசையிலா
இ)வசையிலா - வண்பயன்
ஈ)குன்றும் - இசையிலா
விடை : இ)வசையிலா - வண்பயன்

89.'நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற" - இதில அமைந்துள்ள எதுகையினைக் கண்டறிக
அ)நகையும் - உவகையும்
ஆ)கொல்லும் - சினத்தின்
இ)பகையும் - உளவோ
ஈ)நகையும் - பகையும்
விடை : ஈ)நகையும் - பகையும்

90.'உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை"
இத்தொடரில் அமைந்த எதுகையை அறிக
அ)உள்ளம் - உடைமை
ஆ)உடைமை - உடைமை
இ)உடைமை - உள்ளம்
ஈ)பொருளுடைமை - உடைமை
விடை : ஆ)உடைமை - உடைமை




No comments:

Post a Comment