Wednesday, 17 August 2016

9.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.இவற்றில் பாரதியார் எழுதிய நூல் எது?
அ)குயில்பாட்டு
ஆ)கண்ணன்பாட்டு
இ)பாஞ்சாலி சபதம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

12.இவற்றில் பாரதியார் இயற்றிய உரைநடை இலக்கியம் எது?
அ)ஞானரதம்
ஆ)சந்திரிகையின் கதை
இ)தராசு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

13.இவற்றில் எந்த சிறப்புபெயர் பாரதியாருக்கு உரியது இல்லை?
அ)பாட்டுக்கொரு புலவன்
ஆ)நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா
இ)தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
ஈ)தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்
விடை : ஈ)தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்

14.பெண்ணடிமை, திராவிட இயக்கச் சிந்தனை, பொதுவுடைமை சிந்தனைகளை தனது கவிதையில் வடித்தவர்?
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)சுரதா
ஈ)நாமக்கல் கவிஞர்
விடை : ஆ)பாரதிதாசன்

15.சாலைகளில் பல தொழில்கள் பெருக வேண்டும் சபைகளிலே தமிழெழுந்து முழங்கு வேண்டும்?
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)நாமக்கல் கவிஞர்
ஈ)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
விடை : ஈ)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

16.இருபதாம் நூற்றாண்டு
அ)உரைநடைக் காலம்
ஆ)நாடகக்கலை காலம்
இ)திரைக்கலை காலம்
ஈ)இலக்கியக் காலம்
விடை : அ)உரைநடைக் காலம்

17.இவரின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தன
அ)கவிமணி
ஆ)நாமக்கல் இராமலிங்கனார்
இ)கண்ணதாசன்
ஈ)பாரதியார்
விடை : ஈ)பாரதியார்

18.முப்பதுகோடி முகமுடையாள் உயிர் மொய் புற ஒன்றுடையாள் என்ற பாரதி கவிதை எதைக்குறிக்கிறது?
அ)பெண்கல்வி
ஆ)தமிழ் வளர்ச்சி
இ)இந்திய ஒருமைப்பாடு
ஈ)தீண்டாமை ஒழிப்பு
விடை : இ)இந்திய ஒருமைப்பாடு

19.எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம் என்ற பாரதிதாசன் கவிதை எதைக் குறிக்கிறது?
அ)தமிழுணர்வு
ஆ)பெண் விடுதலை
இ)திராவிட இயக்க சிந்தனை
ஈ)பொதுவுடமை சிந்தனை
விடை : ஈ)பொதுவுடமை சிந்தனை

20.பாரதியார் பாரதிதாசனிடம் இருந்து இந்த கருத்தில் வேறுபடுகிறார்
அ)தமிழுணர்வு
ஆ)சமுதாய மறுமலர்ச்சி
இ)திராவிட இயக்க சிந்தனை
ஈ)பெண்விடுதலை
விடை : இ)திராவிட இயக்க சிந்தனை




No comments:

Post a Comment