Thursday, 20 October 2016

மலைத்தொடர்கள்

மலைத்தொடர்கள்
தமிழ்நாட்டில் உள்ள மலைத்தொடர்களில்மிக உயரமான சிகரம் தொட்டபெட்டா (2637 மீட்டர்) (தென்னிந்தியாவில் மிக உயர்ந்த சிகரம் ஆனைமுடி (2695 மீட்டர்).
மேற்கு மலைத்தொடரும்கிழக்கு மலைத் தொடரும் நீலகிரி மலைப்பகுதியில் ஒன்று சேருகின்றன.
தமிழகத்தின் நீலகிரியிலிருந்தும்கேரளத்தின் ஆனைமுடி மலையிலிருந்தும் ஒரு கிளைத் தொடர் குன்றுகிழக்கு நோக்கிச் செல்கிறது.இதற்கு பழனிக்குன்றுகள் என்று பெயர்.
பழனிக்குன்றுக்கு தெற்கே வருசநாடுஆண்டிபட்டி என்ற இருமலைத்தொடர்கள் உள்ளன.
வருசநாடு மலைக்கும்அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும்இடைவெளி செங் கோட்டை கணவாய் என்றழைக்கப்படுகிறது.
கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்ற மலைகளாக உள்ளனஇம்மலைகள் பல்வேறு பெயர்களில் கீழ்க்கண்டவாறு அழைக்கப் படுகிறது.
வேலூர் மாவட்டம் - ஜவ்வாது மற்றும் ஏலகிரி மலை,
சேலம் மாவட்டம் - சேர்வராயன் மலை,
விழுப்புரம் மாவட்டம் - கல்வராயன் மலை
திருச்சி மாவட்டம் - பச்சை மலை
நாமக்கல் மாவட்டம் - கொல்லி மலை
தருமபுரி மற்றும் - சித்தேரி மலை
சேலம் மாவட்டம்
திருவண்ணாமலை - செஞ்சிமலைமாவட்டம்
கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்தது சேர்வராயன் மலை.
தமிழகத்தின் பீடபூமிகள்
தமிழகத்தின் பீடபூமியை கோயம்புத்தூர் பீடபூமிமதுரை பீடபூமி என இரு வகையாகப் பிரிக்கலாம்.
இந்த இரு பீடபூமிகளுக்கும் இடையே பல குன்றுகள் உள்ளனஅதில் ஒரு குன்றுதான் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை.
பீடபூமியின் உயர் நிலங்கள் கோயம்புத்தூர் பீடபூமியை நோக்கி சரிந்துமேற்காக பாரமகால் பீடபூமியாக உருவாகியுள்ளது.
பாரமகால் பீடபூமியின் மற்றொரு பெயர் தருமபுரி பீடபூமி.
தமிழக சமவெளிப்பகுதிகள்
தமிழக சமவெளிகளை ஆற்றுச்சமவெளிகடலோரச் சமவெளி என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
ஆற்றுச் சமவெளிகள் - தமிழகத்தின் வடக்கில் பாலாறுசெய்யாறு,பெண்ணாறு மற்றும் வெள்ளாறு ஆகியவற்றைக் கொண்டது.
கடலோர சமவெளி - வடக்கே பழவேற்காடு ஏரியிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரை சுமார் 1000 கி.மீ வரை பரவியுள்ளது.
தமிழக மத்தியில் காவிரி மற்றும் துணை ஆறுகளாலும்தெற்குப் பகுதியில்வைகைவைப்பாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளாலும் ஆற்றுச்சமவெளிகள் உருவாகியுள்ளது.
தமிழகத்தின் இரு குறிப்பிடத்தக்க கடற்கரை கள் -
1) மெரினா, 2) இராமேஸ்வரம்.
உலகின் இரண்டாவது அழகிய கடற்கரை யான மெரீனா 13 கி.மீ நீளம் கொண்டதுஇராமேஸ்வரம் கடற்பரப்பில் அலைகள் 3 செ.மீ.க்கு மிகாமல் எழும்பும்.
தமிழ்நாட்டின் ஆறுகள்
வடக்கே பாயும் ஆறுகள் - ஆரணிகொற்றலைபாலாறுசெய்யாறுகடிலம்மணிமுத்தாறு மற்றும் தென்பண்ணை.
மத்தியில் பாயும் ஆறுகள் - காவிரிகொள்ளிடம்வெள்ளாறு
காவிரியின் துணை ஆறுகள் - பவானிநொய்யல்மோயாறுஅமராவதி.
காவிரி டெல்டா பகுதியில் பாயும் ஆறுகள் - கொள்ளிடம்மண்ணியாறு,வெண்ணாறுவெட்டாறுஅரசலாறுநாட்டாறுமணிகொண்டனாறுகுடமுருட்டி மற்றும் வீரசோழனாறு ஆகிய காவிரியின் கிளை ஆறுகள் நாற்கர வடிவில் வண்டல் சமவெளியை உருவாக்கியுள்ளது.
காவிரி ஆற்றுக்கும்அதன் முதன்மை கிளை ஆறான கொள்ளிடத்திற்கும் இடையில்தான் ஸ்ரீரெங்கம் அமைந்துள்ளது.
தமிழகத்தின் தென்பகுதியில் வைகை (மதுரை), வைப்பாறு (விருதுநகர்), தாமிரபரணி (திருநெல்வேலி), குண்டாறு (தூத்துக்குடிஇராமநாதபுரம்), சிற்றாறு (திருநெல்வேலிமற்றும் கோதையாறு (திருநெல்வேலிபாய் கின்றன.
தமிழகத்தின் காலநிலை
வானிலை - விளக்கம்ஒரு குறிப்பிட்ட இடத்தில்ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,வளிமண்டலத்தில் காணப்படும் சூழல் வானிலை எனப்படும்.
காலநிலை - விளக்கம்ஒரு பெரிய பரப்பின் நீண்ட கால சராசரி வானிலையே (சுமார் 30 வருடங்கள்காலநிலை எனப்படும்.
முக்கிய காலநிலைக் கூறுகள் - வெப்பநிலைஅழுத்தநிலைகாற்றுஈரப்பதம்மேகங்கள் மற்றும் மழைப்பொழிவு.
தமிழகத்தின் காலநிலை பொதுவாக அயன மண்டல காலநிலை வகையைச் சேர்ந்தது.
தமிழக மழைப்பொழிவு
தமிழகத்திற்கு கீழ்க்கண்ட காற்றுகளால்கீழ்க்காணும் விவரப்படி மழைப்பொழிவு கிடைக்கிறது.
காற்றின் ஆண்டு வீசும் பெயர் மழைப்பொழிவு மாதங்கள்
1. தென்மேற்கு 22% ஜூன் முதல் பருவக்காற்று செப்டம்பர்
2. வடகிழக்கு 57% அக்டோபர் பருவக்காற்று முதல் நவம்பர்
3. சூறாவளிக் 21% நவம்பர் காற்று
தமிழக காடுகள் - அதன் விபரங்கள்
தேசியக் காடுகள் கொள்கையின்படிஒரு பகுதியின் மொத்தப்பரப்பில் குறைந்த பட்சம் 33 சதவீதம் அளவு காடுகள் இருக்க வேண்டும்.
தமிழகத்தின் காட்டுப் பகுதியின் விகிதாச்சாரம் 17 சதவீதம்.
நீலகிரி மாவட்டத்தின் மொத்த பரப்பில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பரப்பு காடுகளாகவே உள்ளன.
இரப்பர் மரங்கள் கன்னியாகுமரி மாவட்டத் திலும்கற்பூர மற்றும் தைல மரங்கள் நீலகிரி மாவட்டத்திலும்தீக்குச்சி மரங்கள் திருநெல் வேலி மற்றும் விருதுநகர் மாவட்டத்திலும் காணப்படுகிறன.
காடுகளின் வகைகள்.
அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்.
ஆண்டு மழைப்பொழிவு : 200 செ.மீ.க்கு மேல்
காணப்படும் மரங்கள் : எபொனிதேக்குசெம்மரம்கருங்காலி
காணப்படும் இடங்கள் : நீலகிரிஆனைமலைச் சரிவு
அயன மண்டல அகன்ற இலைக் காடுகள் - (மற்றொரு பெயர் பருவக்காடுகள்)
ஆண்டு மழைப்பொழிவு :100 செ.மீ முதல் 200 செ.மீவரை
காணப்படும் மரங்கள் : சால்சந்தனம்தேக்குமூங்கில்படாக்
காணப்படும் இடங்கள் : மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவு.
சதுப்பு நிலக் காடுகள்
ஆற்று முகத்துவாரம் மற்றும் ஓதப்பெருக்கு உள்ள பகுதிகளில்.
காணப்படும் மரங்கள் : சதுப்பு மரங்கள்
காணப்படும் இடங்கள் : சிதம்பரம்கோடியக்கரைபிச்சாவரம் (பிச்சாவரம் மிகப்பெரிய சதுப்பு நிலக் காடாகும்.)
மலையகக் காடுகள்
மழைப்பொழிவு அதிகம் உள்ள மழைச் சரிவுகளில்.
காணப்படும் மரங்கள் : மரங்களைத் தவிர புதர்ஏறுகொடி மற்றும் படரும்கொடி வகைகள்.
காணப்படும் இடங்கள் : ஆனைமலைநீலகிரி மலை.
முட்புதர் காடுகள்
நீண்ட வறண்ட காலமும் குறைவான மழைப்பொழிவும் உள்ள பகுதி.
காணப்படும் மரங்கள் : ஆழமான வேர்கனமான தண்டுசதைப்பற்றுள்ள இலை கொண்ட தாவரங்கள்.
காணப்படும் இடங்கள் : வறண்ட பகுதிகளில் உள்ளன.
தமிழ்நாட்டின் வளங்கள்
இயற்கையாகவேமனித முயற்சியின்றிமனிதப் பயன்பாட்டிற்கு புவியில் கிடைக்கும் பொருட்கள் வளங்கள் என்றழைக்கப்படுகிறது.
வளங்களை உயிரின மற்றும் உயிரற்ற வளங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம்.
உயிரின வளங்கள்
1) உயிர் கோளத்திலிருந்து பெறப்படுபவை உயிரின வளங்கள் எனப்படும்.
2) எடுத்துக்காட்டு - காடுகள்விலங்கினம்பறவையினம் மற்றும் கடல்வாழ் உயிரினம் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் பொருட்கள் ஆகும்.
நில வளங்கள்
தமிழக நில வளங்கள் கீழ்க்கண்ட ஒன்பது வகையாகப் பிரிக்கப்படுகிறது.
காடுகள்உபயோகமற்ற நிலங்கள்விவசாயம் அல்லாத நிலங்கள்மேய்ச்சல்நிலங்கள்நடப்பு தரிசு நிலம்மற்ற தரிசு நிலம்உபயோகத்திலுள்ள நிலங்கள்நிகர விளைநிலம்நிகர விளைநிலத்தோடு சேர்க்கப்படாத மரங்கள்பயிர்கள் மற்றும் புதர்ச்செடிகள் ஆகியவை.
மிக அதிகப் பரப்பிலான உபயோகமற்ற நிலங்கள் விழுப்புரம்தேனிமற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ளன.
சென்னை மாவட்டத்தில் 90 சதவீதம் நிலங்கள் விவசாயமற்றஉபயோகங்களான - குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டில் உள்ளது.
ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பயிர்செய்யப்படாத நிலங்களுக்கு நடப்புத் தரிசு என்று பெயர்.
மண்
விளக்கம் - புவியோட்டின் மேற்பகுதியில் உள்ள பாறைகள் அரிக்கப்படு வதன் காரணமாக உருவாகும் நுண்ணிய துகள்களே மண் எனப்படும்.
ஒரு சென்டிமீட்டர் மண் உருவாக நூற்றுக் கணக்கான ஆண்டுகள் தேவைப்படுகிறது.
மண்ணின் காணப்படும் வகைகள் மாவட்டங்கள்
1. வண்டல் மண் - தஞ்சைதிருவாரூர்நாகப்பட்டினம்,
விழுப்புரம்கடலூர்நெல்லை மற்றும் கன்னியாகுமரி.
2. கரிசல் மண் - கோவைமதுரைஇராமநாதபுரம் மற்றும் நெல்லை.
3. செம்மண் - சிவகங்கைஇராமநாதபுரம்
4. துருக்கல் மண் - காஞ்சிபுரம்திருவள்ளூர்,
தஞ்சாவூர்.
5. உவர் மண் - வேதாரண்யம்,
சோழ மண்டலக் கடற்கரைஒவ்வொரு கடலோர மாவட்டத்தின்
10 கி.மீ பரப்பிலான கடலோரப் பகுதி.
காட்டு வளம்
தமிழகத்தில் 3000-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளன.
குறிஞ்சி மலரைதமிழக அரசு சிறப்பு மிக்க மலராக அங்கீகாரம் செய்து பெருமைப் படுத்தியுள்ளது.
பழனிமலைகுற்றால மலைப் பகுதியில் மருத்துவ மூலிகைகள் மிகுந்து காணப் படுகிறது.
அரிய மணம் மிக்க சந்தன மரங்கள்வேலூர் மாவட்டத்தில் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ளன.
வனவிலங்குகளின் முக்கியத்தை உணர்த்திட ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் வன மகோத்சவம் என்ற விழா கொண்டாடப்படுகிறது.


No comments:

Post a Comment