Saturday, 12 November 2016

சந்திரயான்-2 ‘லேண்டர்’ சாதனம் நிலவில் இறங்குவதற்கு பயிற்சி கர்நாடகாவில் நடந்து வருவதாக இஸ்ரோ தலைவர் தகவல்

சந்திரயான்-2 'லேண்டர்' சாதனம் நிலவில் இறங்குவதற்கு பயிற்சி கர்நாடகாவில் நடந்து வருவதாக இஸ்ரோ தலைவர் தகவல் சந்திரயான்-2 விண்கலத்தின் 'லேண்டர்' சாதனம் நிலவில் இறங்குவதற்கான பயிற்சி கர்நாடகாவில் நடந்து வருவதாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்தார். சந்திரயான்-2 இந்தியாவின் லட்சிய விண்வெளி திட்டங்களில் நிலவிற்கு சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்புவதும் ஒன்று. அடுத்த ஆண்டு (2017) அல்லது 2018-ம் ஆண்டு இந்த விண்கலத்தை அனுப்பிவைப்பதற்கு இஸ்ரோ நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இது நிலவு பற்றி ஆராய்ச்சி நடத்துவதற்காக இந்தியாவால் அனுப்பி வைக்கப்படும் 2-வது விண்கலம் ஆகும். ஏற்கனவே 2008-ல் நிலவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சந்திரயான்-1 விண்கலத்தை விட இது மிகவும் மேம்பட்ட தொழில் நுட்பம் கொண்டது. இது தொடர்பாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் நடந்த இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த இஸ்ரோ தலைவர் கிரண்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- பயிற்சி சந்திரயான் விண்கலத்தின் 'லேண்டர்' சாதனம் நிலவில் இறங்கும்போது ஏற்படக்கூடிய இடர்பாடுகள் தொடர்பாக சில சோதனைகளை தற்போது கர்நாடக மாநிலம் சல்லாகெரேயில் நடத்தி வருகிறோம். இதற்காக நிலவின் மேற்பரப்பில் உள்ளது போன்ற செயற்கை பள்ளங்களை அங்கு உருவாக்கி இருக்கிறோம். அதன்மீது சந்திரயான்-2 விண்கலத்தின் 'லேண்டர்' இறங்குவது குறித்த சோதனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு ஏற்படும் இடையூறு நிலையை தடுக்கவும், தரை இறங்கும் பயிற்சிக்காகவும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 'லேண்டர்' தரையிறங்கும்போது செங்குத்தான சரிவு பகுதிகளுக்குள் இறங்கிவிட்டால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை கணிக்கவும், மிகச் சரிவான பகுதிகளில் அது இறங்கி விடக்கூடாது என்பதற்காகவும் இந்த பயிற்சி நடக்கிறது. இல்லாவிட்டால் லேண்டர் சாதனத்தின் ஏதாவது ஒரு கால் பள்ளத்துக்குள் சிக்கிவிடுவதற்கு வாய்ப்பு உண்டு. இதேபோல் லேண்டரின் என்ஜின்கள் அது நிலவில் இறங்கும்போது, அங்குள்ள ஈர்ப்பு விசைக்கு ஏற்ப இயங்கும் தன்மையைக் கொண்டு இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்யும் சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment