Thursday, 3 November 2016

நீதிபதியின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 391 பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு. சான்றிதழ் சரிபார்த்தல் 14-ந் தேதி தொடக்கம்

நீதிபதியின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 391 பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு. சான்றிதழ் சரிபார்த்தல் 14-ந் தேதி தொடக்கம்
நீதிபதிக்கான நேர்முக உதவியாளர் பணியிடங்கள் 92, கணினி இயக்குபவர் பணியிடங்கள் 81, தட்டச்சர் பணியிடங்கள் 102, நீதிமன்ற அலுவலர் மற்றும் தேர்வாளர் பணியிடங்கள் 99 உள்ளிட்ட 391 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகஸ்டு 27, 28-ந் தேதிகளில் தேர்வு நடத்தியது. இந்த தேர்வை 45 ஆயிரத்து 655 பேர் எழுதினர். இதன் முடிவுகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.நேர்முகத்தேர்வு உள்ள பணிகளுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் 14, 15-ந் தேதிகளில் சென்னை பிராட்வே அருகே உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது. நேர்முகத்தேர்வு இல்லாத பணிகளுக்கு 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும்.இத்தகவலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment