Monday, 7 November 2016

வினா வங்கி

வினா வங்கி
1. டெங்கு காய்ச்சலுக்கான பொது தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்த முதல் ஆசிய நாடு எது?.
2. உலகின் முதல் வெள்ளைப் புலிகள் சரணாலயம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?,
3. சிரியா அகதிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்காக எந்த நாட்டிற்கு உலக வங்கி 100 மில்லியன் டாலர்கள் கடனுதவி வழங்கியது?
4. அமெரிக்க தொழிற்சாலைகள் வளர்ச்சி கழகம் வெளியிட்டுள்ள, உலகின் சிறந்த 10 உற்பத்தியாளர் நாடுகள் பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம் எது?
5. இந்தியாவில் அனைத்து அவசர அழைப்புக்கான உதவி எண்ணாக அறிவிக்கப்பட்டுள்ள எண் எது?
6. ஆசிய நாடுகளுக்கான செஸ் கோப்பையை வென்ற நாடு எது?
7. வடகிழக்கு மாநிலங்களுக்கு அகண்ட அலைவரிசை இணைப்பு வழங்குவதற்காக எந்த அண்டை நாட்டின் வழியே தொலைத்தொடர்பு சேவை செய்யப்பட்டுள்ளது?
8. கடந்த ஏப்ரலில் மதுவிற்பனையை முழுவதும் தடை செய்த இந்திய மாநிலம் எது?
9. எந்தவித வியாதிகளால் இந்திய பொருளாதாரத்தில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது?
10. உலக புலிகள் மன்றம், எத்தனை சதவீத அளவில் புலிகளின் எண்ணிக்கை பெருகி இருப்பதாக அறிவித்துள்ளது?
11. சிறந்த அறக்கட்டளை நடத்துபவர்களுக்கான அமெரிக்காவின் பவுண்டர் விருதைப் பெற்ற இந்தியர் யார்?
12. இந்திய ராணுவத்தின் '2016 சத்ருஜீத்' போர்ப்பயிற்சி எங்கு நடந்தது?
13. இந்திய பிரபலம் ஒருவருக்கு சவூதி அரேபியாவின் உயர்ந்த விருதான மன்னர் அப்துல்லாசிஸ் சாஷ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது, அவர் யார்?
14. 2016-ம் ஆண்டுக்கான தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு அறிவிக்கப்பட்டது?
15. ஏப்ரலில் நடந்த ஜி-7 நாடுகள் மாநாட்டில் அணுசக்தி ஆயுதங்களை ஒழிப்பதற்காக செய்யப்பட்ட கூட்டு முடிவு எது?
விடைகள் :
1. பிலிப்பைன்ஸ், 2. மத்தியபிரதேச மாநிலம் சபாரியில், 3. ஜோர்டான், 4. 6-வது இடம், முந்தைய ஆண்டில் 9-ம் இடம் வகித்தது, 5. 112, 6. இந்தியா, வியட்நாமை 3-1 புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது, 7. வங்காளதேசம், 8. பீகார், 9. புகையிலை தொடர்பான பாதிப்புகள், 10. 22 சதவீதம், 11. அன்னை தெரசா, 12. ராஜஸ்தான் மாநில எல்லைப் பகுதியில், 13. பிரதமர் நரேந்திர மோடி, 14. சங்கர் லட்சுமணன், 15. ஹிரோசிமா டிக்ளரேசன்.



No comments:

Post a Comment