Saturday, 11 February 2017

டி.என்.பி.எஸ்.சி நடத்தும் சப்-கலெக்டர் போலீஸ் டி.எஸ்.பி உள்ளிட்ட பணியிடங்களுக்கான முதனிலைத்தேர்வு வரும் 19 ம்தேதி சென்னையில் நடத்தப்படும் என்றும் இதற்கான நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


டி.என்.பி.எஸ்.சி நடத்தும் சப்-கலெக்டர் போலீஸ் டி.எஸ்.பி உள்ளிட்ட பணியிடங்களுக்கான முதனிலைத்தேர்வு வரும் 19 ம்தேதி சென்னையில் நடத்தப்படும் என்றும் இதற்கான ஹால்டிக்கெட்டுகள் இணையதளத்தின் மூலம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 09.11.2016 அறிவிக்கை எண்.19/2016 மூலம் அறிவிக்கை செய்யப்பட்ட மொத்தம் 85 காலிப்பணியிடங்களுக்கான தொகுதி-Iல் அடங்கிய துணை ஆட்சியர் (29), காவல் துறை துணை கண்காணிப்பாளர் (34), வணிகவரித்துறை துணை ஆணையாளர் (8), மாவட்ட பதிவாளர் (1), மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (5) மற்றும் மாவட்ட அதிகாரி (தீயனைப்பு மற்றும் மீட்புப்பணி) (8) ஆகிய பதவிகளுக்கு முதனிலைத்தேர்வு வரும் 19.02.2017 முற்பகல் மட்டும், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைமையகங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. அதற்கான தேர்வுகூட நுழைவுச் சீட்டு தேர்வாணைய இணையதளமான www.tnpscexams.net ல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப பதிவு எண் (Registration ID/Login ID) மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச் சீட்டு கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் (Challan) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு 14.02.2017ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். § விண்ணப்பதாரரின் பெயர் § விண்ணப்ப பதிவு எண் (Registration ID) § விண்ணப்ப / தேர்வு கட்டணம் (ரூபாய்) § செலுத்திய இடம் அஞ்சலகம் / வங்கி § வங்கிக்கிளை / அஞ்சலகம் முகவரி § Transaction Id / Date 14.02.2017க்கு பிறகு பெறப்படும் கோரிக்கைகளின் மீது எவ்வித நடவடிக்கையிம் மேற்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலொ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலொ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். | Preliminary Examination for Group-I Services scheduled to be held on 19.02.2017 FN only The Preliminary Examination is scheduled to be held on 19.02.2017 FN at the venues in 33 district headquarters for the direct recruitment to 85 vacancies for the posts included in Group-I Services, viz., Deputy Collector (29), Deputy Superintendent of Police (34), Assistant Commissioner, Commercial Taxes (8), District Registrar (1), District Employment Officer (5), District Officer (Fire and Rescue Services) (8) notified through the Commission's Notification No. 19/2016 dated: 09.11.2016. The Memorandum of Admission (Hall Ticket) for the eligible candidates has been hosted in the Commission's website (www.tnpsc.gov.in) and (www.tnpscexams.net). The candidates can download their Hall Ticket from the Commission's website by entering their Registration ID/Login ID and the Date of Birth or know the reason for rejection of his/her application (if any). The candidates who have registered their applications properly in the online and paid examination fee, but unable to download the hall ticket, may get clarification through the Commission's e-mail ID contacttnpsc@gmail.com or the Commission's Grievance Cell using toll free number 1800 425 1002 on or before 14.02.2017 regarding their doubts with following details: Name of the Candidate: Registration ID: Application / Examination fee: Mode of payment with transaction details: Transaction ID/Date: Any representations after 14.02.2017 regarding the Hall-Ticket will receive no attention. V. Shobana, I.A.S., Controller of Examinations இவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment