சார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது

சார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி துணை வணிக வரித்துறை அலுவலர், சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி மற்றும் நிதி தணிக்கைத்துறையில் உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களில் முதுநிலை ஆய்வாளர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் மேற்பார்வையாளர், இளநிலை கண்காணிப்பாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 18 வகையான பதவிகளுக்கான 1,094 காலிப்பணியிடங்களுக்கு குரூப்-2 மெயின் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 9,833 பேர் எழுதினார்கள். இதனையடுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 2,166 பேரின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் ( www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு உள்ளது. இதனையடுத்து நேர்காணல் தேர்வு வருகிற 22-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முடிவடைகிறது. இந்த நேர்காணல் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். மேற்கண்ட தகவலை அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Comments

  1. Get the full details of JEE Main 2018 Answer key Vidyamandir Classes Steps to view the answer key released by Vidyamandir Classes have also been given here. The advantages of using the Vidyamandir Answer Key released by the institute are also provided in this article.

    ReplyDelete

Post a Comment