Tuesday, 4 September 2018

TNPSC - Online upload of Original Certificates for the post Combined Engineering Services Exam.


TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Written Examination for the posts included in Combined Engineering Services was held on 20.05.2018 FN & AN and 27.05.2018 FN. Totally 44,524 candidates have appeared for the said Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of 665 register numbers of candidates those who have been admitted Provisionally to the Certificate Verification for the said post is available at the Commission’s Website “www.tnpsc.gov.in”. The candidates are directed to upload their original documents From 12.09.2018 to 25.09.2018 in the Commission’s website through e-seva centres run by Tamil Nadu Government Cable TV. The memo calling for list of documents to be uploaded and the list of e-seva centres will be made available in the Commissions website “www.tnpsc.gov.in”. The candidates are required to upload their Certificates on the above mentioned dates as Government e-seva centres will not function on holidays. R.SUDHAN, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வு 20.05.2018 மு.ப & பி.ப மற்றும் 27.05.2018 மு.ப அன்று நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 44,524 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தெரிவு செய்யப்பட்ட 665 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 12.09.2018 முதல் 25.09.2018 வரை தங்களது மூலச் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்போது சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் என்னென்ன சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற குறிப்பாணையும், அரசு இ-சேவை மையங்களின் முகவரியுடன் கூடிய பட்டியலும் வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. அரசு இ-சேவை மையங்கள் அரசு விடுமுறை நாட்களில் இயங்காது என்பதால் விண்ணப்பதாரர்கள் கடைசி நாள்வரை காத்திருக்காமல் nknyFwpg;gplg;gl;Ls;s njjpfspy; தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இரா.சுதன், இ.ஆ.ப., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்

No comments:

Post a Comment